யுத்தத்திற்கு பின்னரான சூழலில் இலங்கையின் வட மாகாண பாடசாலை மாணவர்க்குரிய பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளிலான தளம்பல்கள் : அவற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இலங்கையின் தேசிய பொதுப்பரீட்சைகளாக தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றின் வடமாகாண தற்போதைய பெறுபேறுகளை தேசிய மட்ட பெறுபேறுகளுடனும், ஏனைய மாகாணப் பெறுபேறுகளுடனும் ஒப்பிடும் போது வடமாகாணம் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே இந்நிலைமையை ஆய்வுசெய்து மேம்படுத்தவேண்டிய தேவை கல்விச் சமூகத்தினர் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் எழுகின்றது. இவ்வாய்வானது அண்மைக்கால வடமாகாண பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் போக்கினை இனங்காண்பதுடன், குறைநிலைக்கு பொறுப்பான காரணங்களை இனங்காணவும் மற்றும் மேம்படுத்துவதற்கான எதிர்கால சிந்தனை, திட்டம் மற்றும் செயல்கள் பற்றியும் கவனம் செலுத்துகின்றது.