காரைக்காலம்மையாரும் அவர் பிரபந்தங்களும் -ஓர்ஆய்வு

Abstract

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 'திருத்தொண்டத்தொகை' 1 பேயர் என்ற காரைக்காலம்மையார் பற்றிய முதற் குறிப்பைத் தருகின்றது. இது பாடலின் அரைவரியிலமைந்த மிகச் சிறிய குறிப்பாகும். 'பேயர்' என்ற ஒரு விவரத்தை மட்டுமே இது தருகின்றது. 'திருத்தொண்டத் தொகை'யை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பியால் பின்னர் பாடப்பட்ட. 'திருத்தொண்டர் திருவந்தாதி' 2 காரைக்காலம்மை யார்பற்றிய முழுப்பாடலொன்றைக் கொண்டுள்ளது. அம்மையார் காரைக் காலில் தோன்றியதையும், இறைவன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்க விரும்பாது தலையால் ஏறிச் சென்றதையும் அதைக்கண்டு இறைவன் அம்மை' என்று பாராட்டியதையும் இப்பாடல் குறிப்பிடுகின்றது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By