உளவியல் நோக்கில் பால்நிலைச் சமத்துவம்: சைவ சமயத்தை அடிப்படையாகக்கொண்டது
| dc.contributor.author | Keerththigan, M. | |
| dc.contributor.author | Chandisekaram, P. | |
| dc.date.accessioned | 2026-03-03T07:14:01Z | |
| dc.date.available | 2026-03-03T07:14:01Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.description.abstract | இவ்வாய்வானது சைவ சித்தாந்தத்திலும், அதன் மரபு நூல்களிலும், ஆண், பெண், மூன்றாம் பாலினம் உள்ளிட்ட பாலினங்களுக்கிடையிலான சமத்துவத்திற்குக் கிடைத்த இடத்தை உளவியல் ரீதியாகக் கூர்ந்து ஆராய்கின்றது. பால்நிலை சமத்துவம் என்பது ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம் உட்பட அனைவரும் சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் சமூக மரியாதைகளுடன் வாழும் சூழலை குறிக்கின்றது. இவ் ஆய்வின் முக்கிய நோக்கம், சைவத்தில் ஆண், பெண், மூன்றாம் பாலினம் ஆகிய பாலினங்களுக்கிடையிலான சமத்துவம் எந்த அளவிற்கு வலியுறுத்தப்படுகிறது மற்றும் அது தற்போதைய சமூக ஒழுங்கமைவுகளுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதை ஆராய்வதாகும். இவ்வாய்வு ஒப்பீட்டு மற்றும் தனிமனித உளவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. இலக்கிய பகுப்பாய்வு, உள்ளடக்கவியல் ஆய்வு மற்றும் தத்துவ அடிப்படையிலான புனைவு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆண், பெண், மூன்றாம் பாலினம் ஆகிய அனைவரும் தத்துவ ரீதியாக சமமான ஆத்மாக்களாகவே கருதப்படுகின்றனர். இது உளவியல் ரீதியாக, அடையாள ஏற்றம், மதிப்பீட்டு உணர்வு, மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகின்றது. இவ்வாய்வு, சைவத்தின் பாரம்பரிய உளவியல் அடிப்படைகள் இன்றைய பால்நிலை சமத்துவக் கோட்பாடுகளோடு இணைந்து நிற்கின்றன என்பதைக் காண்பிக்கின்றது. மூன்றாம் பாலினத்தவரும், சைவக் கோட்பாடுகளில் ஆத்ம சமத்துவத்தின் அடிப்படையில், மதிப்புள்ள இடத்தைக் பெற்றிருப்பது சைவத்தின் தீவிர சிந்தனையை வெளிக்கொணர்கின்றது. இவ்வாய்வு, சமகாலத்தில் பால்நிலை சமத்துவத்தைப் பற்றிய புரிதலை விரிவுபடுத்துவதோடு, எதிர்காலக் கலந்தாய்வுகளுக்கும் தக்க வழிகாட்டுதலாக அமையும். இவ்வாய்வில் சைவத்தில் பால்நிலை சமத்துவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உளவியல் நோக்கில் சைவ சித்தாந்த்தை ஆய்வின் எல்லையாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் ஆய்வினை விபரணப் பகுப்பாய்வு முறையியல் முறையை அடிப்படையாகக்கொண்டு தொகுக்கப்பட்டு, உளவியல் நோக்கிலும் சைவ சித்தாந்தக் கருத்துக்களிலும் உள்ள பால்நிலை சமத்துவப் பார்வைகள் ஒப்பிட்டு ஆராயப்படவுள்ளன. இவ்வாய்வு, சைவ இலக்கியங்கள், திருமுறைகள், சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை முதன்மை ஆதாரங்களாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தம், ஆத்மாவை பாலினமின்றி சமமானதாக கருதுவதின் வழியே, எல்லாப் பாலினங்களுக்கும் குறிப்பாக ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சம மதிப்பையும் உரிமையையும் வழங்கும் தத்துவ அடித்தளத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய நோக்கில், சைவம் வெறும் மதம் அல்ல அது சமூகத்தில் ஒற்றுமையை உருவாக்கும் உளவியல் அமைப்பாகவும் அமைகிறது | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12285 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | சைவம் | en_US |
| dc.subject | பால்நிலைச் சமத்துவம் | en_US |
| dc.subject | உளவியல் | en_US |
| dc.subject | சைவ சித்தாந்தம் | en_US |
| dc.subject | ஆண் | en_US |
| dc.subject | பெண் | en_US |
| dc.subject | மூன்றாம் பாலினம் | en_US |
| dc.subject | ஆத்ம சமத்துவம் | en_US |
| dc.title | உளவியல் நோக்கில் பால்நிலைச் சமத்துவம்: சைவ சமயத்தை அடிப்படையாகக்கொண்டது | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- உளவியல் நோக்கில் பால்நிலைச் சமத்துவம்.pdf
- Size:
- 178.8 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: