நெற்பயிர்ச்செய்கையில் உவர்நீரின் தாக்கம்: சிறப்பக J/382 கிராமசேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்டது
Loading...
Files
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
உவர்நீர் தாக்கத்தால் நெற் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்பு என்ற ஆய்வானது கப்பூது பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக அமைகின்றது. இப்பிரதேச விவசாயிகளினால் நெல் உற்பத்தியில் உவர்நீர் உட்புகுவதனால் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிவதே இவ் ஆய்வின் நோக்கமாக அமைந்தது. இவ் ஆய்வானது முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளைப் பயன்படுத்தி விபரணமுறை, புள்ளி விபரமுறையியல், தரவுப்பகுப்பாய்வு முறை மூலம் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வகையிலே இவ் ஆய்வானது J/382 கிராமசேவையாளர் பிரிவில் 100 குடும்பங்கள் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றன. இவர்களில் 50 வீதமானோரை மட்டும் மாதிரிகளாக தெரிவு செய்து ஆய்வுக்கென பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தின் மூலமும் கரவெட்டி விவசாய திணைக்களத்தின் கையேட்டின் தரவுகள், தகவல்கள், விபரணமுறை, மூலம் பகுப்பாய்வு செய்யப்ட்டு உவர்நீர் தாக்கத்தால் நெற்பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் பிரச்சினை என்பன பற்றி விளங்கப்பட்டுள்ளது.நெற்பயிர்ச்செய்கையில் தாக்கத்தினை அளவிடும் வகையில் உற்பத்தி, வருமானம், விளைநிலங்களின் பரப்பளவு,விதைநெல்லின் கிடைப்பனவு, உற்பத்தி செலவு, பருவகாலம் என்பன மாறிகளாக பயன்படுத்தப்பட்டு அவர்களின் வருமானம் வீழ்ச்சி அடைந்தமை ஆய்வு முடிவாகப் பெறப்பட்டது. இவ் ஆய்வின் மூலம் கப்பூது பிரதேசத்திற்கு உட்பட்ட J/382 பிரிவிலுள்ள விவசாயிகள் நெற்பயிர்ச்செய்கையில் உவர்நீர் உட்புகுவதன் காரணமாக பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் எனவும் கூறமுடியும்.எனவே கப்பூது பிரதேச மக்களின் வருமானத்தை அதிகரிக்க கூடிய வகையில் உற்பத்திக்கு தகுந்த வழிமுறைகளை மேற்கொள்வது சிறந்தது என ஆய்வு வலியுறுத்துகிறது.