போதனா நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் தயார்நிலைக்கும் e-தொழிநுட்பத்தேர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு
| dc.contributor.author | Banureka, A. | |
| dc.contributor.author | Piratheeban, K. | |
| dc.date.accessioned | 2025-01-27T05:47:38Z | |
| dc.date.available | 2025-01-27T05:47:38Z | |
| dc.date.issued | 2024 | |
| dc.description.abstract | தகவல் தொழிநுட்ப யுகத்தில்; வாழும் ஆசிரியர்கள் அனைவரும் கற்பித்தலில் இலத்திரனியற் சாதனங்களைப் பயன்படுத்துவதும், அதற்கான தொழிநுட்பத்தேர்ச்சியைப் பெற்றிருப்பதும் அவசியமாகும். இந்த ஆய்வானது போதனா நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் தயார்நிலைக்கும் தொழிநுட்பத்தேர்ச்சிக்கும் இடையான தொடர்பை ஆராய்வதை நோக்காகக் கொண்டு அளவறி அணுகுமுறையில் அமைந்த குறுக்கு வெட்டு அளவைநிலை விபரண ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நல்லூர்க் கல்விக்கோட்ட 1AB பாடசாலைகளில் இடைநிலைப் பிரிவில் கற்பிக்கும் 260 ஆசிரியர்கள் ஆய்வுக்குடித்தொகையாகக் கொள்ளப்பட்டு அவர்களில் 155 ஆசிரியர்கள் படைகொண்ட எழுமாற்று மாதிரிமுறை மூலம் ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நான்கு பகுதிகளில் 30 மூடியவகை வினாக்களை மாத்திரம் கொண்ட, ஆய்வாளனால் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தைப் பயன்படுத்தித் தரவுசேகரிக்கப்பட்டது. வினாக்கொத்தின் நம்பகமானது Cronbach’s Alpha குணகத்தைப் பயன்படுத்தியும் (α = .953) வினாக்கொத்தின் தகுதியானது உருப்படி மொத்த இணைபு முறையைப் பயன்படுத்தியும் உறுதிப்படுத்தப்பட்டது (Tcalculated>Ttable (.3882, df = 24, p = .05). சேகரிக்கப்பட்ட தரவுகள் விபரணப்புள்ளிவிபரவியல் நுட்பங்களான சராசரிகள் மற்றும் சதவீதங்கள் என்பவற்றைப் பயன்படுத்தியும், அனுமானப்புள்ளிவிபரவியல் நுட்பங்களான Pearson correlation test ஐப் பயன்படுத்தியும் பகுப்பாய்வு செய்யப்பட்டு கண்டறிதல்கள் முன்வைக்கப்பட்டன. போதனா நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் தயார்நிலை (M = 3.66, SD = .769) மற்றும் e-தொழிநுட்பத்தேர்ச்சிநிலை (M = 3.64, SD = .823) என்பன உயர்ந்தளவில் காணப்படுகின்றது. போதனா நோக்கத்திற்காகஇலத்திரனியற் சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் தயார்நிலைக்கும்,ந-தொழிநுட்பத்தேர்ச்சிநிலைக்கும் பொருண்மையான உயர்நேர் இணைபு அவதானிக்கப்பட்டுள்ளது (r = .806, n = 155, p < .001). இந்த ஆய்வானது போதனா நோக்கத்திற்காக இலத்திரனியற்சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் தயார்நிலையை மேம்படுத்துவதற்கு அவர்களின் e-தொழிநுட்பத்தேர்ச்சிநிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. | en_US |
| dc.identifier.citation | பானுரேகா, அ.இ பிரதீபன், கு (2024). போதனா நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் தயார்நிலைக்கும் ந-தொழிநுட்பத்தேர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு. Proceedings of First International Research Conference in Education IRCE – 2024, 250. | |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11005 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.subject | e-கற்றல் | en_US |
| dc.subject | e-தொழிநுட்பத் தேர்ச்சி | en_US |
| dc.subject | எண்மிய அறிவு | en_US |
| dc.title | போதனா நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் தயார்நிலைக்கும் e-தொழிநுட்பத்தேர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் ........pdf
- Size:
- 244.53 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: