யாழ்ப்பாணக் குடாநாட்டில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பாரம்பரியக் கல்விமுறை
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய பாரம்பரியக் கல்விமுறையென் னும்பொழுது 19ஆம் நூற்றாண்டில் நிலவிய மரபுவழிக் கல்விபற்றியே இங்கு ஆராயப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதி களிலும் பரம்பரை பரம்பரையாக மரபுவழிக் கல்விமுறை தொடர்ந்து வந்தமைக்குரிய சான்றுகள் பல காணப்படுகின்றன. ஐரோப்பியர் வரு கையையொட்டி நிறுவனரீதியிலான கல்விப்பரம்பல் தொடங்குவதற்கு முன் னரே குடாநாட்டில் அங்குமிங்குமாகப் பல திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடைபெற்றுள்ளன. நாம் இங்கு பாரம்பரியக் கல்விமுறையெனக் குறிப் பிடுவது திண்ணைப் பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற மரபுவழிக் கல்வியையே.
யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலிருந்து இக்கல்விமரபு பரந்திருந்த மையை அறிய முடிகின்றது. யாழ்ப்பாண மன்னர்களின் பின் போர்த்துக் கேயர், ஒல்லாந்தர் காலங்களிலும் இப்பாரம்பரியக் கல்விமுறை பரவலாகக் காணப்பட்டிருக்கின்றது. இக்கட்டுரைத் தலைப்பு ஆங்கிலேயர் காலப்பகு தியையொட்டி அமைவதாலும் அக்காலப் பகுதியில் குடாநாடெங்கணும் பரந்திருந்த கல்வி மரபினை அறிய ஆதாரபூர்வமான சான்றுகள் கிடைப்ப தாலும் சிறப்பாகப் பிரித்தானியர் காலத்துப் பாரம்பரியக் கல்விமர பினையே ஆராய்கிறோம்.