தரம் 5 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்: கண்டாவளை பிரதேச செயலர் பிரிவினை அடிப்படையாக கொண்ட ஆய்வு

dc.contributor.authorAiswarya, S.
dc.contributor.authorRavishankar, V.
dc.date.accessioned2022-01-07T09:50:45Z
dc.date.accessioned2022-06-27T05:14:06Z
dc.date.available2022-01-07T09:50:45Z
dc.date.available2022-06-27T05:14:06Z
dc.date.issued2018
dc.description.abstractஇலங்கையின் இயங்குதிறனையும் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியையும் தீர்மானிக்கும் பல்வேறு உப அமைப்புக்களில் கல்வி உப அமைப்பு மிக வலுவானதாக காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்திற்கு பின் கல்வி நிலையானது வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. தற்போது கல்வி மீதான ஆர்வம் அதிலும் தரம் 5 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை மீது பெற்றோர்களின் அக்கறை என்பது அதிகரித்து வருகின்ற போதிலும் சித்தியடைவோர் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. எனவே 'கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்விற்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டு SPSS, EXCEL போன்ற மென்பொருட்களினை பயன்படுத்தி இணைவுக்குணம்,பிற்செலவு மாதிரி, சராசரிப் பெறுமதி போன்ற முறைகளின் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் குடும்ப சூழல் மற்றும் தனியார் கல்வி நிலையம் சென்ற காலம் மாணவர்களின் பெறுபேற்றில் மிகப்பெரிய பங்கு வகிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.en_US
dc.identifier.isbn978-955-627-126-3
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4911
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectபுலமைப்பரிசில் பரீட்சைen_US
dc.subjectபெறுபேறுen_US
dc.subjectமாணவர்கள்en_US
dc.subjectதனியார் கல்வி நிலையம்en_US
dc.subjectகுடும்ப சூழல்en_US
dc.titleதரம் 5 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்: கண்டாவளை பிரதேச செயலர் பிரிவினை அடிப்படையாக கொண்ட ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
09.pdf
Size:
1.2 MB
Format:
Adobe Portable Document Format

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Plain Text
Description:

Collections