இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு LGBTQIA+ சமூகம் பற்றிய பார்வை: ஒரு கிறிஸ்தவ ஒழுக்கவியல் விசாரணை

dc.contributor.authorJency, J.
dc.contributor.authorPaul Rohan, J.C.
dc.date.accessioned2025-06-03T08:41:51Z
dc.date.available2025-06-03T08:41:51Z
dc.date.issued2025
dc.description.abstractஒவ்வொரு மனிதர்களும் இயற்கையாகவே மாண்புடன் பிறக்கின்றார்கள். ஆகவே அனைவருமே சமமானவர்கள். பிறர்மட்டில் சமூக இயல்புகளுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்துக்கொள்வதற்காகவே ஒழுக்க நியமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒழுக்கமானது மனிதர்களால் மட்டுமே பின்பற்றப்படுகின்றப் பண்புகளில் பிரதானமானதும் பொதுவானதுமாகும். தற்காலச் சூழமைவுகளில் புதிதாகத் தோற்றம் பெற்றச் சமூகக் கட்டமைப்பான LGBTQIA+ பால்நிலைப் பிறழ்வுச் சமூகத்தின் ஒழுக்க நியமங்கள் பற்றிய தெளிவு மக்களிடையே இன்மையால் பிரதான பேசும்பொருளாக உள்ளது. இச் சமூகங்களுக்குள் இயற்கையான மற்றும் செயற்கையான காரணிகளால்; பால்நிலையில் பிறழ்வடைவோர் அனைவரும் உள்ளடக்கப்படுகின்றனர். LGBTQIA+ சமூகத்தினைப் பற்றிய அறிமுகங்களையும்; பால்நிலைப் பிறழ்வுகளுக்கானக் காரணங்களையும் கிறிஸ்தவ அடிப்படைகள்; கொண்டுள்ளன. பால்நிலைப் பிறழ்வினர்களும் மனிதர்களை நல்வழிப்படுத்துகின்ற அறநெறி கோட்பாடுகளுக்குற்பட்டவர்கள். என்றடிப்படையில் இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களான கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் LGBTQIA+ சமூகத்தினைப் பற்றிய ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனூடாக LGBTQIA+ சமூகத்தின் செயற்பாடுகளை கிறிஸ்தவ ஒழுக்கவியலின் ஒளியில் பகுப்பாய்வு செய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும். மனிதரின் மாண்பினைப் பிரதானப்படுத்திய ஒழுக்கச் சிந்தனைகள் மற்றும் பால்நிலைப் பிறழ்வைப் பற்றிய ஆதாரங்கள் திருவிவிலியம், திரு அவையின் போதனைகள் மற்றும் ஏனைய நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள் என்பவற்றினூடாகவும் பெறப்பட்டுள்ளன. பால்நிலைப் பிறழ்வுகளுக்கான காரணிகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இணையத்தளத் தரவுகள் மற்றும் ChatGPT என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகளை வரலாற்று முறையியலினூடாகவும், தொகுத்தறியும் முறையியலினூடாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில்; LGBTQIA+ சமூகத்தின் சமகாலப்போக்குகளை அறிந்துக்கொள்வதற்காக, இப் பால்நிலையினரின் அமைப்புக்களைச் சார்ந்தவர்களிடமும், அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோர் மற்றும் சமூகத்தவர்கள் அனைவரிடமும் நேர்காணலினூடாக, செவிப்புல ஆதாரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. பெற்றுக்கொண்ட தகவல்களை உய்ர்த்துணர் முறையியலுக்குட்படுத்தி, கிறிஸ்தவ ஒழுக்கவியலின் பார்வையைக்கொண்டு LGBTQIA+ சமூகத்தினை விசாரணை முறையில் பகுப்பாய்வுச் செய்வதும் இவ் ஆய்வின் இலக்குகளில் ஒன்றாகும். ஒழுக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றடிப்படையில் LGBTQIA+ சமூகம் தங்களின் செயற்பாடுகளால் வேறுபட்டு நிற்பதோடு, அவற்றை நியாயப்படுத்துகின்றனர் என்ற ஆய்வுப் பிரச்சினைக்கான தேடலாகவும் இவ் ஆய்வானது அமைந்துள்ளது. மனிதரின் மாண்பினைப் பிரதானப்படுத்துகின்ற ஒழுக்கக் கோட்பாடுகளையே கிறிஸ்தவம் கொண்டுள்ளது. எனவே LGBTQIA+ சமூகச் செயற்பாடுகளும் கிறிஸ்தவ ஒழுக்கவியலுக்குற்பட்டதாகவே இருக்க வேண்டியது அவசியமாகும் எனும் கருதுகோள்களை முன்வைத்தே இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைக்காலச் சமூகச் சிந்தனைப் போக்குகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி, பேசும் பொருளாக மாறியுள்ள பால்நிலைப் பிறழ்வுகளால் உருவாகியுள்ள LGBTQIA+ சமூகம் தொடர்பானத் தெளிவினைப் பெறுதல் அவசியமாகும். ஆகவே LGBTQIA+ சமூகம் தொடர்பாக திரு அவையின் நிலைப்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் பற்றிய தெளிவுகளை வெளிப்படுத்துவதாகவும் இவ் ஆய்வின் பயன்கள் காணப்படுகின்றன.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11330
dc.language.isoenen_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectமனிதரின் மாண்புen_US
dc.subjectபால்நிலைப் பிறழ்வுen_US
dc.subjectபால்நிலைச் சமூக அமைப்புக்களen_US
dc.subjectபால்நிலை ஈர்ப்புen_US
dc.subjectமனிதரின் சமூகவியல் தன்மைகள்en_US
dc.titleஇலங்கையின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு LGBTQIA+ சமூகம் பற்றிய பார்வை: ஒரு கிறிஸ்தவ ஒழுக்கவியல் விசாரணைen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு-2-3.pdf
Size:
833.17 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: