கொடிகாமம் மத்தி J/327 கிராமஅலுவலர் பிரிவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கிரந்தி எண்ணெய் பாவனை
Loading...
Date
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Unit of Siddha Medicine, University of Jaffna
Abstract
குழந்தைப் பருவத்தில் முதல் ஐந்து வருடங்கள் மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் ஏற்படக்கூடிய பிரதான நோய்களில் கிரந்தியும் ஒன்றாகும். கிரந்தி நோய்க்கு பாலவாகடம், பரராசசேகரம்-பாலரோக நிதானம் போன்ற நூல்களில் கிரந்தி எண்ணெய் பயன்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது. இன்றும் 'கிரந்தி எண்ணெய்" பாவனை தமிழர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஆய்வானது கொடிகாமம் மத்தி J/327 கிராம அலுவலர் பிரிவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கிரந்தி எண்ணெயின் பாவனை பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட 67 மொத்த குழந்தைகள் ஆய்வுக்காகத் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் குழந்தைகளில் 43.28%(29) ஆனோர் ஆண்களும் 56.71%(38) ஆனோர் பெண்களாவார். குழந்தைகளில் 86.56%(58) ஆனோர் குழந்தைகளிற்கு 41ஆம் நாளிலிருந்தே கிரந்தி எண்ணெய் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளில் 88.05%(59) ஆனோர் வைத்திய ஆலோசனைப் படியும் 1194%(8) ஆனோர் வைத்திய ஆலோசனையின்றியும் கிரந்தி எண்ணெய் பயன்படுத்துகின்றனர். மேலும் கிரந்தி எண்ணெயினை 68.65%(46) ஆனோர் அரச சித்த வைத்தியசாலைகளிலும் 19.40%(13) தனியார் (பரம்பரை) வைத்தியசாலைகளிலும் 11.94%(8) ஆனோர் தாமாக கிரந்தி எண்ணெயினை தயாரித்தும் பயன்படுத்துகின்றனர். 1 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கிரந்தி எண்ணெய் பாவனை அதிகமாக 32.83%(22) உள்ளது. ஒவ்வொரு நாட்களும் கிரந்தி எண்ணெய் பயன்படுத்திய குழந்தைகளில் 71.64%(48) ஆனோர் கிரந்திநோயால் பாதிக்கப்படவில்லை. தரம் 10ற்கு குறைவான கல்வித்தகைமை உள்ள தாய்மாரின் குழந்தைகளுக்கு கிரந்தி நோய்ப்பாதிப்பு 23.88%(16) அதிகமாக உள்ளது. தரம் 10ற்கு மேற்பட்ட கல்வித்தகைமை உள்ள தாய்மாரின் குழந்தைகளுக்கு கிரந்திநோய்ப்பாதிப்பு 76.11%(5) குறைவாக உள்ளது. ஆய்வின் முடிவுகளின்படி குழந்தைகளில் கிரந்தி எண்ணெயின் பாவனை 100%(67) உள்ளது என்பதும் இதன் பயன்பாடு குழந்தைகளுக்கு ஏற்படும் கிரந்திநோயின் தாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதும் முடிவாகின்றது.