செங்கை ஆழியானின் நாவல்களில் வரும் உரையாடல்களின் மொழி பற்றிய சில குறிப்புகள்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
ஆக்க இலக்கியமொன்றின் மொழி நடை பற்றி ஆய்வு செய்யும்
போது ஆசிரியரின் கூற்றாக வருகின்ற மொழிநடை, பாத்திரங்களின் கூற்றாக வருகின்ற மொழிநடை எனப் பகுத்து ஆய்வு செய்வதே முறையாகும். இங்கு பாத்திரங்களின் உரையாடற் பகுதி களில் அமைந்துள்ள மொழிநடையே ஆய்வு செய்யப்படுகின்றது.
ஈழத்துத் தமிழ் நாவலுலகில் பலரா லும் அறியப்பட்டவரும் ஈழத்து நாவலாசிரி யர்களுள் எண்ணிக்கை அடிப்படையில் அதிக நாவல்களை எழுதியவர்களில் ஒரு வரும், ஈழத்தில் ஒரு தலைசிறந்த நாவலை எழுதக்கூடியவர் என்று பலரும் எதிர் பார்க்குமளவுக்கு முயற்சியும் திறமையும் உடையவரும் கந்தையா குணராசா என்ற இயற்பெயருடைய செங்கை ஆழியானே என்றால் அது மிகையாகாது. அத்தகைய படைப்பாளியொருவரின் வாடைக்காற்று, காட்டாறு ஆகிய இரு நாவல்கள் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
திருப்தியானதும் தனது பெயரை நிலை பெறவைத்ததும் வாடைக்காற்று நாவல் தான் என்று கூறும் செங்கை ஆழியான் ''ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றில் வாடைக்காற்றைப் போலப் பரபரப்பை யும் பல்வேறு தர விமர்சனங்களையும் பெற்ற நாவல் வேறு எதுவும் இல்லை '' என்றும் கூறுகின்றார். 1 எனவே வாடைக் காற்றினை விடுத்து செங்கை ஆழியானை ஆய்வு செய்வது பொருந்தாது. இவ்வாறே செங்கை ஆழியானின் படைப்புக்களில் காட்டாறும் முக்கியமானது. அவரின் வார்த்தைகளில் சொன்னால் 'ஈழத்தி லேயே மிகப் பெரிய பரிசினைப் பெற்ற நாவல் இது' 2 எனவே காட்டாற்றினை விடுத்துச் செங்கை ஆழிபானின் நாவல் களை ஆய்வு செய்வதும் பொருத்தமாக இருக்காது இத்தகைய காரணங்'ளே இச் சிறிய ஆய்வில் வாடைக் காற்றினையும் காட்டாற்றினையும் தெரிவு செய்ய ஏதுக் களாக அமைந்தன.