ஆற்றுப்படுத்தல் நோக்கில் அபரக்கிரியை மரபு: மலையகத்தை முன்னிறுத்தியது
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
ஆற்றுப்படுத்தல் நோக்கில் அபரக்கிரியை மரபு மலையகத்தை முன்னிறுத்தியது என்ற தலைப்பிலான இவ்வாய்வானது மலையக அபரக்கிரியை முறைமையில் உள ஆற்றுப்படுத்தலுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை ஆராய்கின்றது. அபரம் என்பது பிந்தியது, கிரியை என்பது செயல் எனப்படுகின்றது எனவே மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் கிரியைகள் அபரக்கிரியைகள் எனப்படுகின்றன. அபரக்கிரியை முறைமைகள் மனிதனுடைய உணர்வுகளோடு கலந்து உள ஆற்றுப்படுத்தல்களை மேற்கொள்கின்றன. மக்கள் கிரியை முறைமைகளை நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றக்கூடியவர்களாக இருக்கின்றனர். அந்த நிலைப்பாட்டில் இருந்து இறப்புத்துயராளரின் பிரிவுத்துயரை ஈடுசெய்யும் வகையில் மலையக அபரக்கிரியை முறைமைகளின் பங்களிப்பானது காணப்படுகின்றது என்பதனை அறிவதே இவ்வாய்வின் முயற்சியாக உள்ளது. பகுத்தறிவு வாதிகள் சிலரும்; ஏனைய சமயத்தவர்களும் அபரக்கிரியைகளை மூடநம்பிக்கையானது பயனற்றது என்று கூறுவர். ஆனால்; மலையக மக்களின் நம்பிக்கையை பொறுத்தவரையில் அபரக்கிரியைகள் எல்லாம் மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதாகவும் ஆற்றுப்படுத்துவதாகவும் அமைகின்றது என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் ஆய்வுப் பிரச்சினையாகும். அன்பிற்குரிய ஒருவரை இழக்கும் பொழுது பாரியளவிலான உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் இருந்து இறப்புத்துயராளரை மீட்டெடுக்க கிரியை முறைமைகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இங்கு ஆய்வு எல்லையாக மலையகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மலையக அபரக்கிரியை முறைமைகளின் படிமுறைகள், ஆகமம் சார்பான அபரக்கிரியை முறைமைக்கும் மலையக அபரக்கிரியை முறைமைக்குமான தொடர்பு, உள ஆற்றுப்படுத்தலில் மலையக அபரக்கிரியை முறைமைகளின் பங்கு மற்றும் தற்கால சூழலோடு அவை அனைத்;தும் எவ்வாறு தொடர்புப்படுகின்றது என்பது குறித்து இவ்வாய்வு வெளிப்படுத்த முயல்கின்றது. மலையக மக்களது அபரக்கிரியை மரபுகள் பெரும்பாலும் அவர்களது குடும்ப, சூழல் பின்னணியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டமையால் ஆகம விதிமுறைகளை பின்பற்றுவது என்பது அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாய்வில் கள ஆய்வுமுறைகளும் ஒப்பீட்டாய்வு முறைகளும் கையாளப்படுகின்றன. இந்த ஆய்வானது மலையகத்தின் ஆற்றுப்படுத்தலில் அபரக்கிரியையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் தொடர்பாக எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் அடித்தளமாக அமையும்.