சேர். செய்யித் அகமத்கான் இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
செய்யித் அகமதின் சீர்திருத்தம், சமூகம், சமயம் என்பவற் றுடன் நின்றுவிடவில்லை. முஸ்லிம்களின் அரசியலில் குறிப் பிடத்தக்க திருப்பத்தை அவர் ஏற்படுத்தினார்.
- ஆர். சி. மஜும்தார் இந்தியாவின் ஐக்கியத்தையும் நலனையும் ஒரு காலத்தில் தன் இலட்சியமாகக் கொண்டிருந்த சேர். செய்யித் அகமத்கான் பின்னர் முஸ்லிம்களின் அரசியற் போக்கையும் கல்வி எழுச்சியையும் ஹிந்துக் களின் அரசியல், கல்வி எழுச்சிகளில் இருந்து வேறுபடுத்தி வளர்த் தமைக்குரிய காரணங்களை அறிவது கடினமான பணியே.
'ஹிந்துவும் முஸ்லிமும் இந்தியாவின் இருகண்கள்' என்றும் இந்தியச் சட்டசபைகளில் பிரித்தானியர் மட்டுமே இடம் பெற்றிருந்த போது சட்டசபைகளில் இந்தியனின் குரல் ஒலிக்க வேண்டும் என் றும் குரல் எழுப்பிய அவர்தான் முஹம்மதலி , ஜின்னாவுக்கு முன் னரே இந்திய முஸ்லிம்களைத் தேசிய இனத்தவரெனச் சுட்டிக் காட்டி யவர் என்பது ஆச்சரியத்துக்குரியதே. முஸ்லிம்களிடையே தாமொரு தனி இனத்தவர் என்ற உணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கெனத் தனி அரசியல் போக்கினை உருவாக்கித்தந்ததன் மூலம் இந்தியா இரண்டுபடச் செய்யித் காரணமானார் என்பது உண்மையாக இருக்க லாம். அதனால் அவர் இந்தியாவின் எதிரி என்றும் ஏகாதிபத்தியத் தின் ஏவலாள் என்றும் சறை கூறுவது பொருத்தமற்றது. பிராமண ஹிந்துக்களில் பலர் வெள்ளை நிறத்தவருடன் தங்கள் ஆரியத்தன் மையை இனங்கண்டு பெருமிதங் கொண்டிருந்தபோது பிரித்தானி யருக்கெதிரான கருத்துக்களை இந்தியாவின் சார்பில் முன்வைத்த பெரியார் அவர்.