கத்தோலிக்கத் திரு அவை ஆலயங்களின் கட்டடக்கலை: சுன்னாகம், குளமங்கால் பங்குகளின் ஆலயங்களை மையப்படுத்திய நோக்கு

dc.contributor.authorMariya manokaran, R.M.
dc.contributor.authorMary Winifreeda, S.
dc.date.accessioned2025-06-03T06:35:14Z
dc.date.available2025-06-03T06:35:14Z
dc.date.issued2025
dc.description.abstractமனிதனின் சிந்தனை, ஆன்மீக உணர்வு என்பவற்றின் வெளிப்பாட்டு அம்சமாகக் கலை திகழ்கின்றது. கலையானது இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், இலக்கியம், கட்டடம் போன்ற வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. கிறிஸ்தவத்தின் பிறப்பிடம் ஆசியாவாகக் காணப்பட்டாலும் பவுலின் மறைதாதுப்பயனங்கள், யூத கலாபனை போன்ற காரணங்களினால் மிகத் தீவிரமாகக் கிறிஸ்தவம் எருசலேமுக்கு வெளியே ஐரோப்பாவிலும் தளம் பதித்தது, வளர்ச்சிக் கண்டது. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் நாடுகாண் பயணம், மக்களின் அறிவியல் சிந்தனை மாற்றம் எனப் பல காரணிகள் கீழைத்தேச நாடுகளில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. அதன்படி கிறிஸ்தவம் இலங்கையில் போத்துக்கேயரின் வருகையுடன் வேருன்றியது. கிறிஸ்தவர்களின் தொகை பெருக்கத்தினால் வழிபாட்டு மையங்களின் தேவை உணரப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆலயம் குடிசையாகத் தோற்றம் பெற்றுப் பின்னர் கட்டடக்கலை வளர்ச்சியினூடே பிரமாண்டமான ஆலயங்கள் தோற்றின. இவ் ஆய்வானது இலங்கையின் வடப்புலத்தே அமைந்துள்ள யாழ் மறை மாவட்டத்தின் இளவாலை மறைக்கோட்டத்தை மையப்படுத்திய பதின்நான்கு பங்குகளில் சுன்னாகம், குளமங்கால் பங்குகளில் உள்ள ஆறு ஆலயங்கள், ஆறு சிற்றாலயங்கள் என்பவற்றின் கட்டடக்கலை வடிவமைப்பை மட்டும் மையப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கத்தோலிக்க திரு அவை ஆலயங்களின் கட்டடக்கலை அம்சங்களை மேற்கூறிய மறை மாவட்டதின் இளவாலை மறைக் கோட்டத்தைச் சார்ந்த சுன்னாகம் குளமங்கால் ஆலயங்களின் கட்டடக்கலை அம்சங்களினூடாக எடுத்துரைத்தல் ஆய்வின் பிரதான நோக்கமாகும் குறித்த ஆய்வு பரப்பிற்குட்பட்ட ஆலய, சிற்றாலயங்களில் மிகப்பழமையான கட்டடக்கலை நுட்பங்கள் காணப்படுவதுடன், அவற்றில் ஐரோப்பிய, சுதேச கட்டடக்கலை அம்சங்களின் செல்வாக்கும் உண்டு என்னும் கருதுகோளை ஆய்வு மையப்படுத்தியுள்ளது. ஆய்வில் இலங்கையின் சுதேச கலை வடிவங்கள் தொடர்பான தேடலுக்கு நூல்கள், சஞ்சிகைகள் ஆய்வுகள்மூல பெறப்பட்ட தரவுகளுடன் கள ஆய்வு மூலம் அவதானிப்பு முறையும் ஒப்பீட்டாய்வு முறையும் கையாளப்பட்டுள்ளது. ஆய்வில் ஆலயங்களின் தொன்மையான வரலாறு எடுத்துரைக்கப்படுவதுடன் ஆலயத்தின் கட்டடக்கலை அம்சங்களும், அவை வெளிப்படுத்தி நிற்கும் ஆழமான இறை நம்பிக்கை மறையுண்மைகளும் ஆராயப்பட்டுள்ளது. முடிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆலயங்கள் சிற்றாலயங்களில் தூய சுதேச கலையம்சங்களின் செல்வாக்குக் காணப்படுகின்றன என்பதை விட ஐரோப்பிய கலை பணியுடன் இணைந்த சுதேச கட்டடக்கலையம்சங்கள் வெளிப்படுகின்றன எனலாம். மக்களின் விசுவாச வாழ்வின் அச்சாணியாக ஆலயம் திகழ்வதுடன், ஆலயம் இறைவனின் உறைவிடம் என்ற கருத்து நிலை ஆலயத்தின் கட்டடக்கலை பணியிலும் அதன் வளர்ச்சியிலும் அதன் பாதுகாப்பிலும் செல்வாக்கு செலுத்தும் என்பது எடுத்துரைக்கப்பட வேண்டியது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11280
dc.language.isoenen_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectகுறியீடுகள்en_US
dc.subjectகலையம்சங்கள்en_US
dc.subjectவடிவங்கள்en_US
dc.subjectஆலயங்கள்en_US
dc.subjectசிற்றாலயங்கள்en_US
dc.titleகத்தோலிக்கத் திரு அவை ஆலயங்களின் கட்டடக்கலை: சுன்னாகம், குளமங்கால் பங்குகளின் ஆலயங்களை மையப்படுத்திய நோக்குen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
கத்தோலிக்கத் திரு அவை ஆலயங்களின் கட்டடக்கலை சுன்னாகம், குளமங்கால் பங்குகளின்.pdf
Size:
566.69 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: