சமகாலத்தில் தீவிரமடையும் மதமாற்ற முயற்சிகளும் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களும்

dc.contributor.authorLinuja, R.
dc.contributor.authorRamanaraja, S.
dc.date.accessioned2024-02-27T07:54:23Z
dc.date.available2024-02-27T07:54:23Z
dc.date.issued2024
dc.description.abstractமக்கள் நல்லொழுக்க நெறியில் நின்று நன்மை அடைதல் வேண்டும். இதற்கு கடவுளின் துணை இன்றியமையாதது. எவ்வுயிர்க்கும் துணையாய் கடவுளை வணங்கி நலமடையவே மதங்கள் ஏற்பட்டன. இவ்வகையாய் கூறுமிடத்து மதங்கள் பலவானதேன் என்ற வினா நம்மிடையே எழலாம். அதாவது மெய்யறிவு பெற்றோர் தத்தமது நாட்டில் கல்வி, அறிவு, ஒழுக்கம், விருப்பங்களுக்கேற்றபடி மதங்களை ஏற்படுத்தினர். அந்தவகையில் உலகில் தோன்றிய புராதன மதங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு மதம் இந்து மதம் எனலாம். வேற்று மதங்கள் சிலவற்றின் நடவடிக்கைகளால் இந்து மதத்திற்கு கால ஓட்டத்தில் பாதிப்புக்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறாக சமகாலத்தில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுகின்ற இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலணித்துவம் எனப்படும் குடியேற்ற ஆட்சிமுறை மறைந்து விட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களே இவ்வாறான மதம்மாறும் மற்றும் மதம்மாற்றும் செயற்பாட்டில் செல்வாக்கு செலுத்துகின்றன. அந்தவகையில் காலணித்துவ காலப்பகுதி முதல் வமகாலம் வரையான மதமாற்றத்திற்கான காரணிகளை வெளிக்கொணர்ந்து அதனால் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாய்வு விபரண ஆய்வு முறை வரலாற்று ஆய்வு முறை என்னும் ஆய்வு முறையியலுக்கமைய கட்டமைக்கப்பட்டள்ளது. ஆயினும் இவ்வாய்வில் கள ஆய்வினை மையப்படுத்தி மதமாற்றத்திற்கான காரணிகளை கண்டறிவதனை மட்டும் ஆய்வின் எல்லையாக் கொண்டுள்ளது. சமகாலத்தில் அதிகளவிலான மதமாற்றச் செயற்பாடுகள் நடைபெறுகிறது என்பதும் அதற்கான பல உத்திகள் மதமாற்றிகளால் கையாளப்பட்டு வருகின்றன என்பதும் மதமாற்றத்தினால் இந்து சமூகத்தினர் பல சவால்களைச் சந்திக்கின்றனர் என்பதும் இதைத் தடுப்பதற்காக பல வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதும் இவ்வாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதன்வழி பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்க முடிகிறது. சமூகப் பணிகளைச் செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல், மூட நம்பிக்கைகளைக் களைதல் வேண்டும். வழிபாடுகளை தமிழில் இயற்றுதல், சாதிப்பாகுபாட்டைக் களைதல், இந்து தொண்டர் நிறுவனங்களை உருவாக்குதல், இந்து மத நூல்களைக் கற்கத் தூண்டுதல், அறக்கல்வி போதிக்கும் ஆசிரியர்களை ஊக்குவித்தல், இந்துச்சஞ்சிகை சிறப்பாக வெளியிடல், ஆன்மீக விசுவாசிகள் சமய ஞானமும் நாட்டமும் உள்ளவரை நியமித்தல், இந்து மத நூல்களில் உள்ள சிக்கல் தன்மையை நீக்க வேண்டும். இவ்வாறு இவ்வாய்வானது மதமாற்றம் பற்றி ஆராய முயல்பவர்களுக்கும், இந்து என்ற முறையில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்த முயல்வதற்கும் பயனுடையதாய் அமையும்.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10134
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectமதம்en_US
dc.subjectஇந்து சமூகம்en_US
dc.subjectஇந்துen_US
dc.subjectமதம் மாற்றிகள்en_US
dc.subjectவிழிப்புணர்வுen_US
dc.titleசமகாலத்தில் தீவிரமடையும் மதமாற்ற முயற்சிகளும் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களும்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
சமகாலத்தில் தீவிரமடையும் மதமாற்ற முயற்சிகளும் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களும்.pdf
Size:
730.8 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections