சுற்றுலாவில் பறவைகள் சரணாலயங்களின் தற்போதைய நிலையும் அதன் எதிர்கால அபிவிருத்திப் போக்கும்: வட இலங்கையை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு
| dc.contributor.author | Jeevamalar, S. | |
| dc.contributor.author | Thulasika, D. | |
| dc.date.accessioned | 2026-02-27T08:33:06Z | |
| dc.date.available | 2026-02-27T08:33:06Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.description.abstract | இலங்கையின் சமகாலப் பொருளாதார அபிவிருத்தியில் சுற்றுலாத்துறையானது பிரதான பங்காற்றி வருகின்றது. அந்த வகையிலே நாட்டில் நடைபெற்ற யுத்த ஓய்வினைத் தொடர்ந்து வடமாகாணத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைக் காணமுடிகின்றது. இத்துறையின் ஊடாக மிகையான அந்நிய செலாவணி, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளல், பிராந்திய அபிவிருத்தி என பல தரப்பட்ட நன்மைகள் உணரப்பட்ட நிலையில்இவ்வாய்வானது முன்னெடுக்கப்பட்து. ஆய்வின் நோக்கம் வட இலங்கையில் பறவைகள் சரணாலயங்களின் முக்கியத்துவத்தை அறிதல், பறவைகள் சரணாலயங்களின் விருத்திக்கான உள்ளார்ந்த வாய்ப்புக்களை இனங்காணல், தற்போதைய நிலையினை மதிப்பிடல் மற்றும் வெளிக்கொணர்தல், எதிர்கால அபிவிருத்திக்குரிய தந்திரோபாயங்களை முன்மொழிதல் என்பனவாகும். கள ஆய்வு மூலம் பல தகவல்கள் பெறப்பட்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டது. இதனூடாக வட இலங்கையில் உள்ள பறவைகள் சரணாலயங்களான சுண்டிக்குளம், வங்காலை, கொக்கிளாய் மற்றும் சரசாலை குருவிக்காடு பறவைகள் வாழிவிடம் போன்ற மையங்கள் வட இலங்கையில் சிறந்த பறவைகள் சரணாலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைவிட 15 இடங்கள் பறவைகளைப் பார்வையிடக்கூடிய மையங்களாகவும் இனங்காணப்பட்டுள்ளது. மேற்படி ஆய்வில் சரணாலயங்களின் வளர்ச்சி தொடர்பாக குறிப்பிட்ட மையங்களில் காணப்படக்கூடிய சுற்றுலா வளர்ச்சிக்கான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதன் மூலமாக இம் மையங்கள் சுற்றுலா பயணிகளை கவருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக இச்சரணாலயங்களில் தங்குமிட வசதிகள், போக்குவரத்து வலையமைப்புக்கள், பயணிகளை கவர்ந்து ஈர்க்ககூடிய செயற்பாடுகளின் அவசியத்தையும் உணரக்கூடியதாய் உள்ளது. அத்துடன் சரணாலயங்களினை சூழ காணப்படும் ஏனைய சுற்றுலா மையங்களினையும், தளங்களினையும் அபிவிருத்தியை நோக்கி நகரத்துவதற்கு ஏற்ற உபாயங்களும் இவ்வாய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது. | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12280 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | சுற்றுலா | en_US |
| dc.subject | பறவைகள் | en_US |
| dc.subject | விலங்குகள் | en_US |
| dc.subject | சரணாலயங்கள் | en_US |
| dc.subject | அபிவிருத்தி | en_US |
| dc.title | சுற்றுலாவில் பறவைகள் சரணாலயங்களின் தற்போதைய நிலையும் அதன் எதிர்கால அபிவிருத்திப் போக்கும்: வட இலங்கையை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- சுற்றுலாவில் பறவைகள் சரணாலயங்களின் தற்போதைய நிலையும் அதன் எதிர்கால அபிவிருத்திப் போக்கும்.pdf
- Size:
- 207.17 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: