நாட்டார் கலைமரபில் வசந்தன் கூத்து ஓர் ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
நடனக்கலையின் படிமுறை வளர்ச்சியானது பூர்வீக நடனம், கிராமிய நடனம், சாஸ்திரிய நடனம் என்ற மூவகைப்பட்ட பரிணாமவளர்ச்சி நிலை களைக் கொண்டதாகும். வேட்டை, போர், சடங்கு என்ற நிலைகளைப் பிரதிபலிப்பனவாகப் பூர்வீக நடனங்கள் அமையும். கிராமிய நடனங்கள் நாகரீக வளர்ச்சி நிலைகளை உள்வாங்கி, இதிகாசக் கதைகள், வரலாற்றுக் கதைகள், மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களது மரபுகள், நம்பிக்கை கள், பொழுதுபோக்குகள். கேளிக்கைகள், தொழில்முறைகள் முதலி யனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு தாளம்பட்ட ஆடலும் பாடலும் அமையப்பெற்றனவாகக் காணப்படும். சாஸ்திரிய இலக்கண வரையறை களுக்கு உட்பட்டனவாக இராகம், தாளம் ஆகியவற்றுக்கு அமைய நிகழ்த் தப்படுவனவே சாஸ்திரிய நடனங்களாகும்.1 இவற்றுள் கிராமிய நடனங் களில் ஒன்றாகிய வசந்தன் கூத்துப்பற்றி நாட்டார் வழக்கியல் நோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது.