சமுர்த்தி கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்ட பயனாளிக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள்: மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி கிராமசேவகர் பிரிவினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு

dc.contributor.authorKenasroy, V.
dc.contributor.authorSrikanthan, S.
dc.date.accessioned2026-02-26T09:46:35Z
dc.date.available2026-02-26T09:46:35Z
dc.date.issued2025
dc.description.abstractசமுர்த்திக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்ட பயனாளிக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற ஆய்வானது மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவானது மிகவும் வறுமை கோட்டுக்குப்பட்ட மக்களுக்கு நிறுத்தப்படுவதனால் அவர்கள் தங்களுக்கான வாழ்வாதாரமானது இல்லாமல் சமூகப் பொருளாதார சவால்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் இந்த ஆய்வானது சமுர்த்தி பெற்று வந்த பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவு இடைநிறுத்தப்படுவதனால் அவர்கள் எதிர்நோக்கும் சமூகப் பொருளாதார விளைவுகளை மதிப்பிடல் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்டது. இங்கு பண்பு சார் ஆய்வு வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், விடய ஆய்வு மற்றும் குவிமையக் குழு கலந்துரையாடல் என்பனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக பிரதேச செயலக அறிக்கை, ஆய்வுக்கட்டுரைகள், இணையத்தளங்கள், கிராம சேவகர பிரிவு அறிக்கைகள், ஆண்டு அறிக்கைகள், நூல்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் குறிப்பாக பண்பு சார் தரவுகள் விடய ஆய்வு, நேர்காணல் மற்றும் குவிமையக் கலந்துரையாடல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு நோக்கம் கருதிய மாதிரி அடிப்படையில் சமுர்த்திப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டும் அஸ்வெசும நலன்புரி திட்டம் இல்லாமலும் காணப்படும் குடும்பங்களில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 15 குடும்பங்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்த ஆய்வின் மூலம் வறுமைக்கோட்டின் கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு இடைநிறுத்தப்படுவதனால் அவர்கள் மிகவும் வெகுவாக சமூக பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆய்வுப் பிரதேசத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் குறைந்த அளவிலே காணப்படுகின்றன. குறித்த ஆய்வின் மட்டுப்பாடாக ஆய்வினை மேற்கொள்வதற்கு போதிய காலமானது காணப்படாமையானது பண்புசார் தரவுகளைப் பெறுவதற்கு அதிக பங்கேற்பாளர்களுடன் அதிக நேரம் செலவிடப்பட்டமை விடய ஆய்வை மேற்கொள்ளமுடியாமல் சொற்ப அளவிலே விடய ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த்தித் திட்டமானது மக்களுக்கு வழங்கப்பட்டு பின்னர் எந்தக் காரணங்களுக்காக அவை நிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை முறையான வகையில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறாக சரியான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்காவிடின் சமுர்த்திக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை மக்கள் எதிர்மறையான கருத்துக்களுடன் தெரிவிப்பதுடன் சமுர்த்தித் திட்டம், பொது மக்களுக்கான நலன்புரி திட்டங்களின் அடிப்படையில் பொதுமக்களிடம் எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ் ஆய்வினுடைய பெறுபேறாக சமுர்த்திக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமையால் பயனாளிக் குடும்பங்கள் சமூக, பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12264
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectசமுர்த்திen_US
dc.subjectபயனாளிen_US
dc.subjectவறுமைen_US
dc.subjectஅஸ்வெசுமen_US
dc.titleசமுர்த்தி கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்ட பயனாளிக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள்: மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி கிராமசேவகர் பிரிவினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வுen_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
சமுர்த்தி கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்ட பயனாளிக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.pdf
Size:
181.34 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections