கடல்மட்ட மாற்றங்களும் கடற்கரை சார்ந்த உருவவியல் அம்சங்களும்: இலங்கையின் வட பிரதேச கரையோர நிலப்பகுதிகளைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு.

Abstract

புவிவெளியுருவவியலாளர்களினால் பெரிதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற ஆய்வுகளில் ஒன்றாகக் கடற்பரப்புடன் தொடர்புபட்ட நிலப்பகுதிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் உருவவியல் அம்சங்கள் முக்கியம் பெற்று விளங்குகின்றன. நீண்டகால கடற்கரைக்குரிய (கடல் - நிலம்) சிக்கலான வெளியுருவ செயன் முறைகளின் விளைவாகவே இப்பகுதிக்குரிய நிலவுருவங்கள் தோற்றம்பெற்று வந்துள்ளன. இத்தகைய செயன்முறைகளில் கடல்மட்ட மாற்றங்கள் மிக முக்கிய பங்கை வகித்துள்ளன. புவி வரலாற்றுக் காலத்தின் மிக அண்மைக்காலமான 'கொலோசின்' கால கடல்மட்ட மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் தென் இந்திய இலங்கை சூழல்களில் கரையோர உருவவியல் அம்சங்கள் பற்றிய புதிய முடிவுகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By