பிளேட்டோவின் கலை, அழகியற் சிந்தனைகளும் சமகால உலகில் அவற்றின் பொருத்தப்பாடும்

Abstract

மெய்யியலில் கலை, அழகியல் குறித்து காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட அறிஞர்கள் தமது கருத்துக்களை தெளிவுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் கிரேக்க சிந்தனையாளரான பிளேட்டோ கலை, அழகியல் பற்றிய தமது சிந்தனைகளை வெளிப்படுத்தி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன்படி கலைகளை உண்மைப்பொருளின் விம்பமாகக் கருதுவது மட்டுமன்றி உண்மை மற்றும் அழகுடன் ஒழுக்கத்தினை இணைத்துப் பார்பதன் ஊடாக உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலைகளையும் கலைஞர்களையும் பற்றிப் பேசுகின்றார். மேலும் மனித உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் கலைகளை உருவாக்கும் கலைஞர்களை ஒழுக்கத்திற்கு முரணானவர்களாகக் கருதி அவ்வாறான கலைஞர்களை நாடு கடத்த வேண்டும் என்கிறார். இவ்வாறு பிளேட்டோவின் நோக்கில் கலைகள் எப்பொழுதும் சமூக நன்மை என்கின்ற இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டதாக செயற்பட வேண்டும் எனவும் அவை ஒழுக்கத்தைப் போதிப்பனவாக அமைய வேண்டும் எனவும் கருதுகிறார். இருப்பினும் இன்றைய நவீன உலகில் காணப்படும் கலைப் படைப்புக்களான கவிதை, இசை மற்றும் ஓவியம் போன்றவை ஒழுக்கம் மற்றும் கலாசார எல்லைகளைக் கடந்து தமது அடையாளம், பிரதிநிதித்துவம் மற்றும் பன்முகத் தன்மைகளை மையப்படுத்தி உருவாக்கப் பட்டவையாக அமைகின்றன. இவ்வகைக் கலைகளில் பிளேட்டோவின் சிந்தனைகள் பிரதிபலிக்கின்ற தன்மைகளைத் தெளிவுபடுத்துவதோடு அவரது கருத்துக்களை உள்வாங்கியவாறான போக்கில் சமகால கலைகள் அமைவதனை தெளிவுபடுத்துவதாகவும் இந்த ஆய்வு அமைந்துள்ளது. இந்த வகையில் இன்றைய சமகால உலகில் இலாப நோக்கத்திற்காகவும் ஏனைய நோக்கங்களுக்காகவும் உருவாக்கப்படும் கலைகள் பற்றிய சிந்தனைகளோடு பிளேட்டோவின் சிந்தனைகள் எவ்வகையில் பொருத்தப்பாடுடையவையாக விளங்குகின்றன ஆய்வின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பிளேட்டோ விட்டுச்சென்ற கலை, அழகியல் பற்றிய கருத்தாக்கங்கள் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமுடையதா? இல்லையா? ஏன்பதும் வெளிக்கொணரப்பட்டுள்து. இன்றைய கலையுலகில் புதிய நுணுக்கங்களும் நுட்பங்களும் உள்வாங்கப்பட்டாலும் ஒழுக்கவியலைப் பொறுத்தவரையில் பிளேட்டோவின் சிந்தனைகள் மீள்வாசிப்புக்குட்படுத்தப்பட்டு பின்பற்றப்படலின் அவசியமானது முடிவாகப் பெறப்பட்டுள்ளது. அத்தோடு ஒழுக்க செயன்முறைகளை நடைமுறைப்படுத்தும் வகையிலான அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் பிளேட்டோவின் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டாம் நிலைத் தரவுகள் இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு வரலாற்று ரீதியான அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒப்பீட்டு ரீதியாக ஆய்வு செய்து பெறப்பட்ட பெறுபேறுகள் விமர்சனப் பகுப்பாய்விற்குட்படுத்தப்படுகின்றன.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By