நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவும்: புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
| dc.contributor.author | Somapalan, M. | |
| dc.contributor.author | Ganesalingam, K.R. | |
| dc.date.accessioned | 2026-03-12T05:44:28Z | |
| dc.date.available | 2026-03-12T05:44:28Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.description.abstract | உலகத்தில் காணப்படும் பௌதீக ரீதியான விடயங்கள் அனைத்திற்கும் ஓர் அரசியற் பெறுமானமானது நிச்சயம் காணப்படும். இவ்வாய்வானது புவிசார் அரசியற் கோட்பாடுகளை முன்னுறுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக உலகம் பல் துருவ நிலையினை அடைந்திருந்தாலும் அதிகாரரீதியான நோக்கு நிலையில் உலகமானது அமெரிக்காவினைத் தலைமையாகக் கொண்ட ஒரு துருவ அரசியல் கட்டமைப்பிலேயே இன்றுவரை இயங்குகின்றது. கிழக்கு ஐரோப்பாவினுடைய இருப்பானது இருதய நிலக்கோட்பாட்டினை மையப்படுத்தியே காணப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்கு பின்னர் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலில் பயணப்பட ஆரம்பித்த உலக அரசியலில் சோவியத் கூட்டரசின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பல நாடுகள் நேட்டோவினால் உள்வாங்கப்படுவது நேட்டோவினுடைய கிழக்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கத்தினை வெளிப்படுத்துகின்றது. ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் மற்றும் நூல்கள் போன்ற இரண்டாம் நிலைத்தரவுகளைப் பயன்படுத்துகின்ற இப் பண்புசார் ஆய்வானது விமர்சன யதார்த்தவாத முறையியலையும் இருதயநிலம் மற்றும் யதார்த்தவாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. பௌதீக அரசியலதிகாரத்திற்கும் மானிட அரசியலதிகாரத்திற்கும் இடையிலான போரில் வெற்றியாளராக யார் இருக்க முடியும் என்பதனை இவ்வாய்வானது விளக்குவதற்கு முற்படுகின்றது. மென்னதிகாரத் தத்துவத்தின் மீதான உலகப் பரிமாணம் மீண்டும் வன்னதிகாரத் தத்துவத்தினை நோக்கிச் செல்கின்றது. பேரரசுவாத முயற்சிகளில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் யாவரும் ரஸ்சிய யுத்தங்களில் தோல்வியினையே சந்தித்திருந்தார்கள். நேட்டோவின் பிராந்திய வலு பற்றியும் கிழக்கு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் நேட்டோவினால் கிழக்கு ஐரோப்பாவை ஆக்கிரமிக்க முடியாமைக்கான காரணங்கள் எவை என்பன பற்றியும் இவ்வாய்வு தேடியுள்ளது. உலகமானது போரற்ற ஒரு பொருளாதார யுகத்தைக் கட்டமைக்க முயலும் போது கிழக்கு ஐரோப்பாவானது யுத்தங்களில் சூழ்ந்திருப்பதென்பது உலகத்தினுடைய அதிகாரச் சமநிலையினுடைய ஒரு வெளிப்பாடாகும். இவ்வாய்வானது கிழக்கு ஐரோப்பாவின் புவிசார் மூலோபாயத்தின் அரசியல் பெறுமானத்தின் கடந்தகால நிகழ்கால மற்றும் எதிர்காலப் பெறுமானங்களைப் பற்றி ஆழமாக ஆராய்கிறது. | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12362 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | மூலோபாயம் | en_US |
| dc.subject | இருதயநிலகோட்பாடு | en_US |
| dc.subject | புவிசார் அரசியல் | en_US |
| dc.subject | அதிகாரச்சமநிலை | en_US |
| dc.subject | யதார்த்தவாதக் கோட்பாடு | en_US |
| dc.subject | சோவியத் ரஸ்சியா | en_US |
| dc.subject | கூட்டுப்பாதுகாப்பு | en_US |
| dc.title | நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவும்: புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவும், புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.pdf
- Size:
- 178.66 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: