நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் கவிதைகள் சில அறிமுகக் குறிப்புகள்

Abstract

எண்பதுகளளவில் ஈழத்துக் கவிதையுலகினுட் பிரவேசித்த சோலைக் கிளியின் கவிதை கள் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிப் போக்கில் மட்டுமன்றி, பொதுவான நவீன கவிதை வளர்ச்சிப் போக்கிலேகூட முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டு வதே இக்கட்டுரையின் நோக்கமாகின்றது. திறனைக் காட்டுவனவாக அமைந்தவை அவர் கையாண்ட படிமங்களாகும். இத்தகைய படிமங்கள் பிரமிப்பூட்டுவன வாகவோ புதுமையானவையாகவோ அதிர்ச்சியூட்டுவனவாகவோ பயங்கர மானவையாகவோ அமைந்திருக்கலாம். அவை எத்தன்மையன என்பதைக் கவிதை யின் உணர்வுத்தளமே தீர்மானிக்கின்றது. சமகாலச் சமூகத்தின் அச்சநிலை வன்முறை சார்ந்த நிலை அவரது கவிதை களில் அதிர்ச்சியூட்டும் படிமங்களாக வெளிப்படு வதனைப் பின் வரும் கவிதைப் பகுதி காட்டுகின்றது. சோலைக்கிளியின் கவிதைகள் உள்ளடக்க ரீதியில் ஏனைய கவிஞர்களது கவிதைகள் போன்று. "இன்றைய காலத்திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத்தியங்கும் நோக்குகள் இன்றைய காலத்திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட்டுக்கள்'' பற்றிப் பேசுவனவாகும். எனவே, இவரது தனித்துவம் வெளிப்பாட்டு முறை சார்ந்ததாகவேயுள்ளது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By