பிரிக்ஸ் அமைப்பு பூகோள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

dc.contributor.authorPirasanth, R.
dc.contributor.authorGanesalingam, K.T.
dc.date.accessioned2026-03-12T07:37:06Z
dc.date.available2026-03-12T07:37:06Z
dc.date.issued2025
dc.description.abstractஇவ்வாய்வு பிரிக்ஸ் (BRICS) அமைப்பு பூகோள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை ஆராய்கிறது. பிரேசில், ரஸயா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய வளர்ந்து வரும் நாடுகளால் உருவாக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு மேலும் விரிவடைந்து எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா போன்ற நாடுகள் இணைந்து பிரிக்ஸ் பிளஸாக மாறியது. மேலும் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. உலக அரசியலில் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் நோக்கத்துடன் BRICS செயற்பட்டு வருகிறது. நவீனகால அரசியலில் பிரிக்ஸ் அமைப்பின் செயற்பாடுகளாக புதிய அபிவிருத்தி வங்கி மற்றும் நிதிச் சேமிப்பு ஏற்பாடுகள் மூலம் பன்னாட்டு நிதி அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக, உலக வணிகம், இராஜதந்திர உறவுகள் மற்றும் பொது வளர்ச்சியில் புதிய நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பானது ஒவ்வொரு வருடமும் உறுப்பு நாடுகளில் சுழற்சி முறையில் மாநாடுகளை நடாத்தி வருகின்றது. இம்மாநாடுகள் மூலம் உலக அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுக்கவும் மற்றும் உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர தொடர்பை ஏற்படுத்துவதாகவும் இம்மாநாடுகள் அமைகின்றது. அடுத்து அரசியலில் இப் பிரிக்ஸ் அமைப்பு பல்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ் உறுப்பு நாடுகள் இணைந்து மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை மேற்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக கொரோனா காலத்தில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அரசியலில் முக்கியமான தாக்கங்களில் ஒன்றாக பூகோள ஆளுமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க, ஐரோப்ப ஆதிக்கத்திலிருந்து மாறுபட்ட பல்துருவத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அரசியல் தாக்கங்களில் ஒன்றாக சர்வதேச அமைப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ((UNSC)) மற்றும் உலக வணிக அமைப்பு போன்ற அமைப்புக்களில் அதிகார சமநிலை மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. இவ்வாய்வு, BRICS அமைப்பின் புவிசார் அரசியல் (Geopolitics) தாக்கங்களை மதிப்பீடு செய்து, நவீனகால அரசியலில் பிரிக்ஸ் அமைப்பின் செயற்பாடுகள், ஒரு புதிய உலக ஒழுங்கு (New world order) உருவாகும் சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே உலக அரசியலில் மேற்குலக வல்லாதிக்கம் குறைந்து உலக ஒழுங்கு மாறி வரும் பாதையை வெளிக்கொணர்வதுடன் நிறுவன ரீதியான பொருளாதார அணுகுமுறைகளில் பிரிக்ஸ் அமைப்பு மாற்றத்தினை ஏற்படுத்துவதை வெளிக்கொணர்கிறது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12364
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectபன்முகத்துவம்en_US
dc.subjectஅரசியல் பொருளாதாரம்en_US
dc.subjectநாணய உத்திகள்en_US
dc.subjectபுவிசார் அரசியல்en_US
dc.subjectஅதிகார சமநிலைen_US
dc.titleபிரிக்ஸ் அமைப்பு பூகோள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்en_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
பிரிக்ஸ் அமைப்பு பூகோள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.pdf
Size:
204.75 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections