சம்பந்தசரணாலயரின் தத்துவவிளக்கமும் ஸ்ரீ காசிவாசிசெந்திநாதையரின் உரைச்சிறப்புக்களும்

Abstract

சம்பந்தரின் தாய்மாமன் சம்பந்தசரணாலயரால் எழுதப்பட்ட தத்துவ விளக்கமானது சைவசித்தாந்த விளக்கவிருத்திக்கு இன்றியமையாத நூலாக உள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்த ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர் மிக விரிவான உரை எழுதியுள்ளார். இவ்வகையில் இந்நூலும் அதனது உரையும் வடமொழி, தமிழ் மொழி மூலமான சைவசித்தாந்த விளக்கத்தைப் பெறுவதற்கு அவசியமானதாக உள்ளது என்பதுடன் சைவசித்தாந்தப் பேராசிரியர் எனத்தக்க மதுரைச் சிவப்பிரகாசர் உட்பட்ட பல அறிஞர்கள் இந்நூலினை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இந்நூலின் ஆசிரியர் பற்றியும், அவரது காலம் பற்றியும் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளமையால், இந்நூல் கூறும் பொருள் மரபு பற்றி ஆராய்வதன் ஊடாக நூலாசிரியர் மற்றும் அவரது காலம் பற்றி ஒரு தெளிவான முடிவை அறிவதற்கு ஏதுவாக இருக்கும் என்பது மட்டுமன்றி உரையாசிரியர் ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர் தரும் கருத்துக்கள் சைவசித்தாந்த மாணவர்களுக்கு சித்தாந்த நுண்பொருள்கள் பற்றி அறிவதற்கு பெரிதும் உதவியாக அமையும் எனக் கருதலாம். இவ்வகையில் தத்துவவிளக்கத்தினையும் அதனது உரையினையும் அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர், அவரது காலம், அது கூறும் பொருள் மரபு பற்றிய முக்கிய அம்சங்களையும் விளக்குவதாக இவ்வாய்வு அமைகின்றது.

Description

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By