கதையாடல், இசை. உடல் மொழி: சின்னமணியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் ஆற்றுகை மரபை ஆராய்தல்
| dc.contributor.author | Ajantha, T. | |
| dc.contributor.author | Navatharshani, K. | |
| dc.date.accessioned | 2026-03-04T03:14:31Z | |
| dc.date.available | 2026-03-04T03:14:31Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.description.abstract | தமிழர் பாரம்பரிய ஆற்றுகை வடிவங்களின் மையமாக கதைசொல்லுதலைக் குறிப்பிடலாம். வில்லுப்பாட்டின் மூலம் வரலாற்று கதைகள், சமூக பிரச்சினைகள் சார் கதைகள், இதிகாச புராண கதைகள் என்பன ஆற்றுகை செய்யப்படுகின்றன. வில்லுப்பாட்டின் போது வில்லுப்பாட்டினை நிகழ்த்துபவர் கதை சொல்லும் பாங்கு, இசைக் கையாள்கை, உடல் மொழிகள் தாக்கம் செலுத்தும். குறிப்பாக வில்லுப்பாட்டு கலைஞரான சின்னமணி அவர்களின் ஆற்றுகைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இவ்வாய்வு அமைகின்றது. கதை சொல்லல் பகுதியில் சின்னமணி பயன்படுத்திய நுட்ப முறைகள் பற்றி ஆராய்கின்றது. சின்னமணி வில்லுப்பாட்டுக்கான எழுத்துருக்களை தானாகவே தயாரித்து தனது குழுவினுடன் ஆற்றுகை செய்துள்ளார். இவர் தனது எழுத்துரு பகுதியில் கதைசொல்லலுக்கு எவ்வாறான வெவ்வேறு நுட்ப முறைகளை பயன்படுத்தியுள்ளார் என்பதனைப் பதிவுசெய்திருக்கிறார். இவர் தனது எழுத்துருவைக் கொண்டு அதனை எவ்வாறு ஒரு ஆற்றுகையாக மாற்றுகின்றார் என்ற ஆய்வுநோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு பண்புசார் முறைகளைப் பயன்படுத்தி பாரம்பரிய வில்லுப்பாட்டின் ஆற்றுகைசார் நுட்ப முறைகள் எவ்வாறு காணப்படுகின்றது? வில்லுப்பாட்டு ஆற்றுகையில் கலைஞர் சின்னமணியின் பங்களிப்பு யாது? இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வில்லுப்பாட்டின் பரவல் எவ்வாறு காணப்படுகின்றது? சின்னமணி தனது எழுத்துருவினை எவ்வாறு ஓர் ஆற்றுகையாக மாற்றுகின்றார்? போன்ற ஆய்வு வினாக்களை கொண்டு இவ் ஆய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. சின்னமணியின் வில்லுப்பாட்டு எழுத்துருவில் காணப்படும் அம்சங்களை தனது சூழலுக்கு ஏற்ப எவ்வாறு ஆற்றுகையாக்கின்றார் மற்றும் இவரது வில்லுப்பாட்டில் இவர் பயன்படுத்திய நுட்ப முறைகள் பற்றி எந்த ஆய்வுகளிலும் குறிப்பிடப்படவில்லை இதன் அடிப்படையில் வில்லுப்பாட்டின் கதையாடல், இசை மற்றும் உடல் மொழி என்பன இங்கு பார்க்கப்படுகின்றது. இவ்வாய்வின் பிரதான நோக்கமாக சின்னமணியின் வில்லுப்பாட்டு பயில்வு இசை ஆற்றுகை முறை எண்ணக்கரு பற்றி தற்காலத்துக்கு எடுத்து செல்லல் ஆகும். பாரம்பரிய வில்லுப்பாட்டின் கட்டமைப்பு மற்றும் வில்லுப்பாட்டின் கதை சொல்லல் பகுதியின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்வதுடன் சின்னமணியின் வில்லுப்பாட்டுகளில் காணப்படும் தனித்துவமான அம்சங்களையும் கண்டறிய முடிந்தது. | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12295 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | வில்லுப்பாட்டு | en_US |
| dc.subject | கதையாடல் | en_US |
| dc.subject | கதைசொல்லல் | en_US |
| dc.subject | சின்னமணி | en_US |
| dc.title | கதையாடல், இசை. உடல் மொழி: சின்னமணியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் ஆற்றுகை மரபை ஆராய்தல் | en_US |
| dc.type | Conference paper | en_US |