சைவசித்தாந்தக் கருத்தியல்களின் வெளிப்பாட்டில் திருமந்திரத்தின் மொழிநடைத்திறன்

dc.contributor.authorSubathini, R.
dc.date.accessioned2024-07-23T04:58:48Z
dc.date.available2024-07-23T04:58:48Z
dc.date.issued2017
dc.description.abstractசைவத் தமிழர்களாகிய நமக்கு ஆதாரநூலாக சிவபரத்துவத்தைப் போற்றும் திருநூலாக திருமந்திரம் காணப்படுகிறது. இத்திருமந்திரம் என்னும் நூலிலுள்ள சைவசித்தாந்தக் கருத்தியல்களை அத்திருப்பாடல் மொழிநடைகளினூடாக எடுத்துக் காட்டுவதே இவ் ஆய்வின் முக்கிய நோக்கமாகும். இறைவனுடைய இயல்புகளை பதி, பசு, பாசம் என்ற கருத்தியல்புகளின் பின்னணியில், திருமூலர் தான் கையாண்ட மொழிநடைக் கூறுகளின் அடிப்படையில் எவ்வாறு புலப்படுத்துகிறார் என்பதை வெளிக் கொணர்வதே இவ்வாய்வுக்குரிய முக்கிய அம்சமாகும். இம் மொழிக்கூறுகளினூடாக சைவசித்தாந்தக் கருத்துக்கள் இழையோடிக் காணப்படுவதை இக்கட்டுரையானது முன்னெடுத்துக் காட்டுகிறது. மேலும் இச்சிந்தனைகள் பற்றிய ஆய்வானது விபரண ஆய்வு முறையினூடாகாகவும், விளக்கமுறை ஆய்வினூடாகவும் எடுத்துக் காட்டப்படுகிறது. இதற்குத் தேவையான உத்தி முறைகளாக சொற்பாகுபாடுகள், நயமிக்க செயற்றொடர்கள், வாக்கியப் பயன்பாட்டு முறைமைகள், கருத்துப் புலப்பாட்டு முறைகள், உணர்ச்சி நடைக்கூறுகள்,உரையாடல்பண்புகள், எளிமையாக்கம் எனப் பலவகைகளில் ஆய்வு முடிவுகள் இங்கு தரப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பல இலக்கிய மீளாய்வுகள் இவ்வாய்வுக்குரிய முடிவுகளை வெளிப்படுத்துவதில் தேவையான தகவல்களைத் தந்துதவியுள்ளன. எனவே திருமந்திரப் பாடல்களில்காணப்படும் சைவசித்தாந்தக்கருத்தியல்களைமொழிநடைக்கூறுகளினுாடாக வெளிப்படுத்தியுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.en_US
dc.identifier.issn2478-0634
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10667
dc.language.isootheren_US
dc.publisherயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்en_US
dc.subjectசைவசித்தாந்தம்en_US
dc.subjectமொழிநடைen_US
dc.subjectஎளிமையாக்கம்en_US
dc.subjectவிபரண ஆய்வுen_US
dc.subjectதிருமந்திரம்en_US
dc.titleசைவசித்தாந்தக் கருத்தியல்களின் வெளிப்பாட்டில் திருமந்திரத்தின் மொழிநடைத்திறன்en_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
சைவசித்தாந்தக் கருத்தியல்களின் வெளிப்பாட்டில் திருமந்திரத்தின் மொழிநடைத்திறன்.pdf
Size:
7.56 MB
Format:
Adobe Portable Document Format

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: