இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்க ளும் (கி. பி. 1000 - 1250)
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இலங்கையிற் சோழராட்சி ஏற்பட்டதிலிருந்து பதின்மூன்றாம் நூற் றாண்டுவரையான காலப் பகுதியிலே தமிழ் வணிகர் குழாங்கள் பல சமு தாயத்திற் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தன. தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் , வாணிப, கலாசாரத் தொடர்பு களின் பயனாகவே திசையாயிரத்து ஐநூற்றுவர், வீரவளஞ்சியர் , நானா தேசிகள் முதலான வணிகர் அமைப்புக்கள் இலங்கையில் வளர்ச்சியடைந் தன. கி றீ ஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலிருந்து தொடர்ச்சியாகவே இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையில் வாணிபம் நடைபெற்றுவந்தது. இலங்கையில் உற்பத்தியான முத்து, இரத்தினம், யானைத் தந்தம் முதலான போகப் பொருட்கள் அதிக பெறுமதி வாய்ந் தன வாயிருந்தன. பல நாடுகளிலுள்ள உயர்ந்தோர் குழாத்தினர்கள் அத் தகைய பொருள்களை விரும்பிப் பயன்படுத்தினார்கள். அவை தென்னிந் தியத் துறைமுகங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு, அங்கிருந்து கடல் வழி யாகவும் தரை வழியாகவும் தூரதேசங்களுக்கு அனுப்பப்பட்டன. இலங்கைக் குத் தேவைப்பட்ட துணி வகைகள், உணவுப் பொருள்கள். உலோ கப் பொருள்கள் முதலியவற்றுட் குறிப்பிடத்தக்க பகுதி தென்னிந்தியத் துறைமுகங்களினூடாக அங்கு எடுத்துச் செல்லப்பட்டன. புராதன காலத்தி லிருந்து தென்னிந்தியாவும் இலங்கையும் ஒரே வர்த்தக நிலையமாக இணைந் திருந்தன.
பாக்குநீரிணை வழியான இந்திய - இலங்கை வர்த்தகம் பெரும்பாலும் தமிழக வணிகர் வசமாயிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக வணி கரின் நடமாட்டங்களும் நடவடிக்கைகளும் இலங்கையின் துறைமுகப் பட் டினங்களிலும் அவற்றை அடுத்துள்ள கரையோரப் பகுதிகளிலும் நகரங் களிலும் தமிழரின் குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு வழியமைத்தன. கி. பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து இலங்கையிலே தமிழ் வணிகரின் செல்வாக்கு மிகக் கூடுதலான அளவிலே ஏற்படலாயிற்று. கூட்டுறவு முறையிலமைந்த தமிழ் வணிகரமைப்புக்கள் அக்காலத்திலிருந்து இலங்கை வர்த்தகத்திலே பங்கு கொள்ளத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய அமைப் புக்கள் இலங்கை வாணிபத்திலும் சமுதாயத்திலும் ஏற்படுத்தியிருந்த செல் வாக்கினைத் தெளிவான முறையிற் புரிந்து கொள்வதற்குத் தென்னிந்தியா விலே அய்யாவொளே , வீரவளஞ்சியர், நானாதேசிகள் போன்ற கூட்டத் தவர் உருவாகி வளர்ச்சியடைந்தமையினை இங்கு சுருக்கமாக எடுத்துரைப் பது அவசியமாகின்றது.