யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட கத்தோலிக்கத் திருப்பயணத்தலங்களின் கலாசாரச் சுற்றுலா அம்சங்கள் (சாட்டி,பாலைதீவு,புல்லாவெளி)

dc.contributor.authorNikita, R.
dc.contributor.authorPaul Rohan, J.C.
dc.date.accessioned2025-06-03T08:15:22Z
dc.date.available2025-06-03T08:15:22Z
dc.date.issued2024
dc.description.abstractயாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள கத்தோலிக்கத் தலங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி கலை, கலாசாரம் மற்றும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்களுடன் மக்களாக வேறுபாடுகளைக் களைந்து வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுக்கும் பின்னணியில் ஆராயப்படுகின்றது. அந்தவகையில் கத்தோலிக்கத் திருப்பயணதலங்களும் அருகில் இருக்கின்ற சுற்றுலாத் தளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருத்தலங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றதை ஆய்வில் இனம் காணப்பட்டுள்ளன. அந்த வகையில் கடற்கரைகள், வனவிலங்கு பாதுகாப்பு மையம் என்பவற்றை மையமாகக் கொண்டு விளங்கும் சுற்றுலாத் தளங்களை ஆய்விற்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடல் அலைகள் மற்றும் வன விலங்குகள் என்பது இயற்கையில் மக்களை கவரும் ஒரு சுற்றுலாத்தளமாகும். தெரிவு செய்யப்பட்ட திருத்தலங்களுக்கு அருகில் உள்ள கடற்கரை என்பது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு கடல்வழிப் பயணத்தை மட்டும் கொண்டு இருக்கின்றது. இங்கே மக்கள் பெரும்பாலும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு திருத்தலங்களும் ஒவ்வொரு நம்பிக்கைகள் பாரம்பரியங்களை கொண்டு விளங்குகின்றது. அந்த வகையில் பாலைதீவு புனித அந்தோனியார் தங்களை பாதுகாப்பதாகவும் தங்களுக்கு செல்வங்கள் தொழில்வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் தந்ததாகவும் கருத்துக்கள் கூறப்படுகின்றது. சாட்டி திருத்தலமானது மாதாவை மையப்படுத்திய திருத்தலமாகும். மற்றும் இங்கே வருகின்றவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரங்களும் திருமண வரங்கள் என்னும் பலவற்றை தங்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகின்றது. இத்திருத்தலங்களுக்கு வருவதற்கு கடற்கரைகளும் முக்கிய இடம் வகிக்கின்றதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் திருத்தலங்களை புதியதொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இன்றைய உலகில் திரு அவை ஏட்டின் படிப்பினைகள் வழிகாட்டுகின்றன. அவதானம் முறை மற்றும் திருப்பயண தலங்களுக்கு வரும் மக்களிடம் இருந்து கருத்துக்கள் திரட்டப்பட்டு இவ்வாறு மேற்கொள்ளப்பட்டது. இக்கத்தோலிக்கத் திருத்தலங்கள் வெறுமனே வழிபாட்டுத்தலங்களாக மட்டுமன்றி ஒரு கலாசார சுற்றுலாத்தளமாக உருவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. சமகாலத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்களிடத்தில் உள்ள வேறுபாடுகளை கலைந்து ஒவ்வொரு கத்தோலிக்க திருத்தலங்களும் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி கலாசாரத்துக்கு மதிப்பளித்து அவற்றைப் பின்பற்றும் வகையில் செயல்படுத்தல் வேண்டும்.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11323
dc.language.isoenen_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectஆன்மீகத் தலங்கள்en_US
dc.subjectசுற்றுலாத் தளங்கள்en_US
dc.subjectபரஸ்பர உறவுen_US
dc.subjectபல்சமயக் கலாசாரம்en_US
dc.subjectகடற்கரைகள் புதுமைகள்en_US
dc.titleயாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட கத்தோலிக்கத் திருப்பயணத்தலங்களின் கலாசாரச் சுற்றுலா அம்சங்கள் (சாட்டி,பாலைதீவு,புல்லாவெளி)en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட கத்தோலிக்கத் திருப்பயணத்தலங்களின்.pdf
Size:
479.95 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: