சர்வதேசரீதியான தொழிலாளர் குடிப்பெயர்வும் விளைவுகளும்

Abstract

சர்வதேச வர்த்தகம், சர்வதேச ரீதியான மூலதனப் பெயர்ச்சி இவை இரண்டும் அவை ஆரம்பிக்கின்ற நாடுகளுக்கும், இறுதியாகச் சென்றடையும் நாடுகளுக்கும் நன்மைகளை அளிக்கின்றன. அவற்றைப் போன்றே சர்வதேச ரீதியாக ஏற்படுகின்ற தொழிலாளர் இடப்பெயர்வும், அவர்கள் எங்கிருந்து சென்றார்களோ அந்நாடுகளுக்கும் எங்கு செல்கின்றார்களோ அத்தகைய நாடுகளுக்கும் நன்மைகளை அளிக்கின்றன. குடிபெயரும் பண்பினை யுடைய தொழிலாளர்கள் பெரும்பாலும் கூடிய உற்பத்தித் திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் சென்றடையும் நாடுகளில் தொழிலாளர்களுக் கான செலவுகள் குறைகின்றன. அவர்கள் பெரும்பாலும் வறுமையான நாடுகளிலிருந்தே செல்கின்றனர். அதனால் தாம் உழைக்கும் வேதனங்களை தமக்கும் தமது உறவினர்களுக் குமாக பின்னர் தமது தாய் நாடுகளுக்கே எடுத்துச் செல்வதனால் அந்நாடுகளின் வருமானம் உயர்வடைகின்றது. இவ்வாறான நன்மைகள் ஏற்படுகின்ற அதேநேரத்தில் சில பிரச்சினைகளும் ஏற்படாமலில்லை.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By