கோபுர மற்றும் விமானச்சிற்பங்களில் பௌராணிக செல்வாக்கு: யாழ்ப்பாணத்திலுள்ள மாதிரி ஆலயங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

dc.contributor.authorNivetha, M.
dc.contributor.authorMukundan, S.
dc.date.accessioned2026-03-03T08:13:30Z
dc.date.available2026-03-03T08:13:30Z
dc.date.issued2025
dc.description.abstractசைவக்கலைப் பண்பாட்டில் கலைச்செல்வங்களின் மகிமைக்குச் சான்றாக திருக்கோயில்கள் காணப்படுகின்றன. திருக்கோயில்களின் ஆன்மீக வெளியிலுள்ள சிற்பங்கள். ஓவியங்கள், கட்டடக்கூறுகள் எல்லாம் ஒரு கதையை கூறுகின்றன. சிற்பங்கள் வெறும் கலைக்காட்சியாக அல்லாது சமய உணர்வுகளின் வெளிப்பாடாகவும், நெறிமுறைகளைக் கட்டியெழுப்பும் கட்டமைப்பாகவும் இருக்கின்றன. சைவ மக்கள் மனங்களில் புராணத்தொன்மங்களை நிலைநிறுத்தும் தளங்களாகவும் காணப்படுகின்றன. இவை பண்டைய தமிழகத்தின் அறிவியல், கலாசாரம், சமயம், கலைக்கழக நுண்ணறிவின் சாட்சிகளாவும் அமைந்துள்ளன. மக்கள் புராண இதிகாசங்களைப் படிக்கவில்லை என்றாலும், கோயிலின் சிற்பங்கள் மூலம் அந்தக் கதைகள் நினைவில் இன்றளவும் நிலைத்திருக்கின்றன. அந்தவகையில் அக்கதைகளின் தழுவல்கள் நிரூபிப்பதாக இவ்வாய்வுப்பரப்பு அதிகம் புராணத்தில் காணப்படுகின்றது. இவ்வாய்வானது யாழ் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலயம், வண்ணை ஸ்ரீ வெங்கடேஸ்வரா வரதராஜப் பெருமாள் கோயில், காரைநகர் சிவன் கோயில்களில் உள்ள திருக்கோவில்களில் அமையப்பெற்றுள்ள கோபுர மற்றும் விமான சிற்பங்கள் புலப்படுத்துகின்ற புராணச் செல்வாக்கினை இனங்கண்டு அடையாளப்படுத்தல். இந்து திருக்கோவில்களில் அமையப்பெற்றுள்ள கோபுர மற்றும் விமான சிற்பங்கள் புலப்படுத்துகின்ற குறியீட்டுத்தன்மையை அடையாளப்படுத்தலும் அதன் பின்னணியை கட்டவிழ்ப்புச் செய்தலும்., கோபுரங்கள் மற்றும் விமானங்களில் உள்ள இதிகாச சிற்பங்கள் உணர்த்தி நிற்கின்ற தொன்மைக் கதையாடலின் தாற்பரியங்களை வெளிக்கொணர்ந்து அடுத்த தலைமுறைக்கு கையளித்தல் எனும் நோக்கங்களின் அடிப்படையில் களஆய்வு, நேர்காணல் உட்பட்ட முதலாம் நிலைத்தரவுகளையும், நூல்கள், சஞ்சிகைகள் உட்பட்ட இரண்டாம் நிலைத்தரவுகளையும் பயன்படுத்தி நல்லூர் கந்தசுவாமி ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார், ஆலயம், வண்ணை ஸ்ரீ வெங்கடேஸ்வரா வரதராஜப் பெருமாள் கோயில், காரைநகர் சிவன் கோயில்களில் உள்ள திருக்கோவில்களில் அமையப்பெற்றுள்ள கோபுர மற்றும் விமான சிற்பங்களின் புராண வரலாற்றை அறிவதோடு புராணம், சிற்பம், திருக்கோயில் என்பன பற்றியும் அறிய முடிகின்றது. மேலும் இவ்வாறான திருக்கோயிலில் உள்ள கோபுர விமான சிற்பங்களின் காணப்படும் புராணச் செல்வாக்கு பற்றிய ஆய்வுகளில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் அமையும் முதன்நிலை ஆய்வாகவும் இது அமைகின்றது. சைவக்கலை மரபின் சிறப்பம்சம் பொருந்திய கலையாகிய திருக்கோயிலின் அமைப்பு முறை, சிறப்பம்சங்கள், கோபுர விமானச் சிற்பங்களின் உருத்தோன்றலாகக் காணப்படும் புராணங்கள் ஆகியன பற்றி அறியும் வகையிலாக இவ்வாய்வானது அமையப்பெற்றமையானது இந்துநாகரீகம் பயிலும் மாணவர்களுக்கு வருங்காலங்களில் புராணிகம் எவ்வாறு திருக்கோயில் விமான, கோபுரச் சிற்பவேலைப்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை அறிவதற்கு உதவியாக அமையும்.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12288
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectகோபுரம்en_US
dc.subjectவிமானம்en_US
dc.subjectசிற்பம்en_US
dc.subjectயாழ்ப்பாணம்en_US
dc.subjectதிருக்கோயில்en_US
dc.subjectபௌராணிகம்en_US
dc.titleகோபுர மற்றும் விமானச்சிற்பங்களில் பௌராணிக செல்வாக்கு: யாழ்ப்பாணத்திலுள்ள மாதிரி ஆலயங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுen_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
கோபுர மற்றும் விமானச்சிற்பங்களில் பௌராணிக செல்வாக்கு.pdf
Size:
180.66 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections