இரண்டாம் வத்திக்கான் சங்கப்பின்னணியில் பொதுநிலையினரின் கடமைகளும், உரிமைகளும்

Abstract

பொதுநிலையினர் திரு அவையில் உரிமையும், கடமையும் கொண்ட முழுமையான அங்கத்தவர்கள். இறைவனின் வார்த்தையைப் போதியளவு கேட்கவும், இறைவனின் அருட்சாதனங்களை அடிக்கடி கொண்டாடி ஊட்டமும், உறுதியும் பெறவும், திரு அவை நலனுக்காகத் தமது ஆலோசனையைக் கூறவும், திரு அவை யின் வாழ்விற்கு ஏதுவான சகல காரியங்களிலும் சுதந்திரத்தோடும், உரிமையோடும் கருத்துக்களைத் தெரிவிக்கவும், தவறுகளைக் கண்டிக்கவும், நன்மையானவற்றை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், சொல்லவும் உரிமையும், கடமையும் கொண்டிருக்கின்றனர். இதனடிப்படையில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பொதுநிலையினர் திருத்தூதுப் பணி பற்றிய கொள்கைகளையும், நடைமுறைகளையும் இதில் ஆராய்ந்ததில், திரு அவை வரலாற்றில் இதுவரை 21 பொதுச்சங்கங்கள் கூட்டப்பட்டுள்ளன. இரண்டாம் முறையாக வத்திக்கான் நகரில் கூட்டப்பட்ட இப் பொதுச்சங்கமே "இரண்டாம் வத்திக்கான் சங்கம்” என அழைக்கப்படுகிறது. 1962 முதல் 1965 வரை 4 அமர்வுகளாக நடைபெற்ற இப் பொதுச்சங்கத்தில் உலகெங்குமிருந்து 2900க்கு மேற்பட்ட ஆயர்கள் பங்கேற்றனர். இப் பொதுச்சங்கம் திரு அவை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பொதுநிலையினரைப் பொறுத்தமட்டில் ஒரு பொற்காலத்தை உருவாக்கித் தந்தது திருஅவைக்குப் புத்துணர்ச்சி வழங்கி புதியதொரு சிந்தனையை அளித்து ஆழமான பொருள் நிறைந்த விதத்தில் அது இவ்வுலகில் பணியாற்றிட வழி வகுத்தது. சங்கத்தின் இறுதியில் 16 ஏடுகள் வெளியிடப்பட்டன. அனைத்து ஏடுகளிலும் பொதுநிலையினரைப் பற்றிய புதிய சிந்தனை பிரதிபலித்தாலும், புதிய பொதுநிலையினர் இறையியலை 1.திருஅவை, 2. பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி, 3.இன்றைய உலகில் திருஅவை என்று மூன்று ஏடுகள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனைகளுக்கேற்ப இக்காலத்தின் தேவைகளுக்கேற்ப திரு அவையின் புதிய சட்டத் தொகுப்பு வெளியிடப்பட்டு 1983 ஆம் ஆண்டு முதல் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. இச் சட்டத் தொகுப்பு நான்கு முக்கிய கோட்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. 1. இறைமக்களே திருஅவை 2.பணிபுரியவே ஆட்சி அதிகாரம் 3.திருஅவை ஓர் உறவுச்சமூகம் 4.திருஅவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமைகள், கடமைகளோடு அனைத்துப் பணிகளிலும் அனைவரும் பங்கேற்பு. இவ்வாறாக சங்கஏடுகள் மற்றும் திருஅவைச் சட்டத்தின் அடிப்படையில் பொதுநிலையினர் இயல்பு, தன்மை, உரிமைகள், கடமைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுவதனைக் காணக்கூடியதாக உள்ளது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By