உளவளத்துணையாளர்களின் சக்தி இழப்பு மற்றும் வேலைத்திருப்தி
| dc.contributor.author | Vinitha, G. | |
| dc.contributor.author | Rajkumar, A. | |
| dc.date.accessioned | 2026-02-24T09:03:14Z | |
| dc.date.available | 2026-02-24T09:03:14Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.description.abstract | உளவளத்துணையாளர்கள் மத்தியில் சக்தி இழப்பு அதிகரிப்பதற்கும் வேலைத்திருப்தி குறைவதற்கும் முக்கிய காரணங்களான பணிச்சுமை, கலாச்சார அழுத்தம், உளநலம், தொடர்ச்சியான சேவைநாடிகளின் வருகை, தகுதியான சம்பளம் இன்மை, சரியான பயிற்சியின்மை, குறைவான உளவளத்துணையாளர் மற்றும் ஆதரவு இன்மை ஆகியவை சக்தி இழப்பு மற்றும் வேலைத் திருப்தியில் பங்களிப்பதோடு இக்காரணிகள் அவர்களது வேலையின் தன்மையிலும் செல்வாக்கினை ஏற்படுத்துகின்ற காரணத்தால் அவர்கள் சக்தி இழப்பினை எதிர்கொள்வதோடு வேலையில் திருப்தியும் குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் உளவளத்துணையாளர்களின் சக்தி இழப்பு மற்றும் வேலைத் திருப்தியிற்கிடையிலான தொடர்பை அளவிடுவதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வானது யாழ்ப்பாண மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உளவளத்துணையாளர்களை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்கள், வைத்தியசாலைகள், அங்கீகாரம் பெற்ற தனியார் உளவளத்துணை அமைப்புக்களைச் சேர்ந்த உளவளத்துணையாளர்களின் நோக்கம் கருதிய எழுமாற்று மாதிரியெடுப்பு முறையின் மூலம் 60 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு அளவுசார் முறையை அடிப்படையாகக் கொண்ட விபரணப்பகுப்பாய்விலான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் தரவு சேகரிப்பு கருவிகளாக Schaufeli, W.B., De Witte, H. & Desart, S.. ஆகியோரால் உருவாக்கப்பட்ட Burnout Assessment Tool மற்றும் Scott mac Donald, Peter mac ஆகியோரால் உருவாக்கப்பட்ட Intyre Job Satisfaction Scale ஆகிய வினாக்கொத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரவுப்பகுப்பாய்வின் போது உளவளத்துணையாளர்களிடம் பெறப்பட்ட தரவுகள் சமூக விஞ்ஞானங்களுக்கான புள்ளிவிபரவியல் மென்பொதியை (SPSS)) பயன்படுத்தி விபரண மற்றும் அனுமானப் பகுப்பாய்வுகள் (இணைவுப் பகுப்பாய்வு, T – பரிசீலனை ANOVA பிற்செலவுப் பகுப்பாய்வு, ஒரு மாதிரி பரிசீலனை, சுதந்திரமான இரு மாறிகளுக்கிடையிலான பரிசீலனை மற்றும் கை ஸ்கொயர் பரிசோதனை) முதலியன மேற்கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. ஆய்வின் முடிவுகளாக, யாழ்ப்பாண மாவட்ட உளவளத்துணையாளர்களின் சக்தி இழப்பு உயர்ந்தளவில் (P = 0.000> X̅=2.6894, சதவீதம் 53.3%) காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்ட உளவளத்துணையாளர்களின் வேலைத் திருப்தி குறைந்தளவில் (P = 0.000> X̅ = 28.75 சதவீதம் = 51.7%) காணப்படுகின்றது. உளவளத்துணையாளர்களின் வேலை அமைப்பு சக்தி இழப்பில் (X2 = 0.502) தொடர்புபடுகின்றது. உளவளத்துணையாளர்களின் வேலைத் திருப்தியில் கல்வி நிலையின் செல்வாக்கு (F = 5.383, P = 0.024) காணப்படுகின்றது. உளவளத்துணையாளர்களின் வேலைத் திருப்தியில் உளரீதியான இடைவெளி தாக்கம் (Adjust R2= 5.3%, F = 4.278, P = 0.043,) செலுத்துகின்றது. உளவளத்துணையாளர்களின் வேலைத் திருப்தி நிலையில் ஊதிய வேறுபாடு F=3.366, P = .025) காணப்படுகின்றது. உளவளத்துணையாளர்களின் ஆற்றலின்மைக்கும் அவர்களின் உளரீதியான இடைவெளிக்குமிடையில் தொடர்பு (r = 0.452, P = 0.000) காணப்படுகின்றது. உளவளத்துணையாளர்களில் அறிகை ரீதியான குறைபாட்டில் ஆற்றலின்மையின் செல்வாக்கு (Adjust R2= 33.3 %, F =30.486, P = 0.000,) காணப்படுகின்றது. உளவளத்துணையாளர்களின் சக்தி இழப்பில் பால்நிலைசார் வேறுபாடு (ஆண்கள் X̄ = 2.6928 பெண்கள் X̅ = 2.6874, F = .018, P = 0.969) காணப்படுகின்றது. உளவளத்துணையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை சக்தி இழப்புக்களை ஆரோக்கியமாகக் கையாளும் வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு அதிகளவிலான ஆய்வுகளை வேலைத் திருப்தி நிலை மற்றும் சக்தி இழப்பை அடிப்படையாகக் கொண்டும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12238 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | உளவளத்துணையாளர்கள் | en_US |
| dc.subject | சக்தி இழப்பு | en_US |
| dc.subject | வேலைத் திருப்தி | en_US |
| dc.subject | யாழ்ப்பாண மாவட்டம் | en_US |
| dc.title | உளவளத்துணையாளர்களின் சக்தி இழப்பு மற்றும் வேலைத்திருப்தி | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- உளவளத்துணையாளர்களின் சக்தி இழப்பு மற்றும் வேலைத்திருப்தி.pdf
- Size:
- 184.94 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: