மாக்ஸின் மெய்யியலும் போயபார்க் கருத்துரைகளும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
19ஆம் நூற்றாண்டுச் சிந்தனையாளரான மாக்ஸின் கருத்துக்கள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் மாக்ஸிச மெய்யியலாக விருத்திசெய் - யப்பட்டதுடன், 1931, 1945 ஆண்டுகளின் பின்னதாக கம்யூனிஸ்ட்கட்சிகளால் நிறுவனமயப்படுத்தப் பட்டது. சோஸலிச இயக்கத்தின் உலகநோக் காகவும், உழைக்கும் மக்களின் வரலாற்றுப் பார்வையாகவும் மாக்ஸினது சிந்தனைகள் ஒழுங்குபடுத்தியமைக்கப்பட்டதுடன்,மாக்ஸே இதனது ஸ்தாபகராகவும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.எவ்வாறாயினும் சோஸலிசகருத்துநிலையும் மாக்ஸினது சிந்தனையும் மேற்குறித்தமுயற்சியில் சரிவர இணைக்கப்பட்டதென்பதற்கில்லை. மாக்ஸினது படைப்புகளிற்கும் அவரது பெயரால் செயற்பட்ட அரசியல் இயக்கங்களிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக எடுத்துக்காட்ட பலமுயற்சிகள் எடுக்கப்பட்டன. எவ்வாறாயினும் மாக்ஸிச மெய்யியலென இன்றுகூறப்படுவதை மாக்ஸினது எழுத்துக்களிற் காணமுடியாது. மாக்ஸினால் பயன்படுத்தப்பட்ட மிகப்பொதுவானதும், மிகஅரூபமானதுமான சொற்களின் அர்த்தம், அடிப்படை, சர்வவியாபகமான குணாம்சம் என்றவகையில் சோஸலிச இயக்க ஸ்தாபகர்களினால் மாக்ஸினது சிந்தனைகள் விரித்துரைக்கப் பட்டதுமல்லாது, மாக்ஸிச மெய்யியலென்ற கோட்பாட்டுருவமும் கொடுக்கப்பட்டது. மாக்சினது எழுத்துக்களிற் காணப்படுகின்ற மெய்யியற் சிந்தனைக்கும், பிற்காலத்தில் மாக்ஸிசமெய்யியல் என அறியப்பட்டதற்கும் இடையில் மிகப்பாரிய வேறுபாடுண்டு.