சமூக ஊடகங்களில் தரவேற்றப்படும் ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கல்: ஊடக அறநெறி சார்ந்த ஓர் பார்வை
| dc.contributor.author | Thuvarnija, S. | |
| dc.contributor.author | Poongulaly, S. | |
| dc.date.accessioned | 2026-03-12T03:17:18Z | |
| dc.date.available | 2026-03-12T03:17:18Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.description.abstract | ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கல் நிறுவனங்களானவை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை பதிவேற்றுவதில் சமூக ஊடக ஒழுக்கநெறி சார்ந்து செயற்படுகின்றனவா என்பதை ஆராய்தல் இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். இந்த ஆய்வானது சமூக ஊடகங்களில் தரவேற்றப்படும் ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கும் நிறுவனங்களானவை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவேற்றலில் சமூக ஊடக ஒழுக்கநெறி பேணப்படுகின்றாதா, இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க கல்வியியலாளர்களின் பார்வைக்கோணங்கள் எவ்வாறு இருக்கின்றது, இது தொடர்பான எதிர்காலப்போக்கு போன்றவற்றினை ஆய்வு செய்கின்றது. இந்த ஆய்விற்காக பனிப்பந்து மாதிரி அடிப்படையில் ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கல் நிறுவன நிறுவுநர்கள் பத்து பேர் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டு நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் நிறுவனத்தின் அறிமுகம். சமூக ஊடகங்களில் கடைபிடிக்கப்படும் ஒழுக்க நெறிகள், வாடிக்கையாளர்களை அணுகும்முறை, ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கல் நிறுவனங்களின் அனுகூலங்கள் மற்றும் பாதிப்புக்கள், எதிர்கால திட்டங்கள் போன்ற தகவல்கள் நேர்காணல் மூலம் பெறப்பட்டன. மேலும் ஆறு வாடிக்கையாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் ஐந்து பேர் பனிப்பந்து மாதிரி முறை மூலம் தெரிவுசெய்யப்பட்டு நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலதிக தரவுகளானவை சமூக ஊடகங்களான புலனம், வலையொலி, முகப்புத்தகம் போன்றவற்றின் மூலம் சேகரிக்கப்பட்டன. மேலும் 2019 ஆம் ஆண்டின் சமூக ஊடகப் பிரகடனத்தின் ஒழுக்க நெறி அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கல் சேவையானது சமூக ஊடக ஒழுக்க நெறியை கடைப்பிடித்து மேற்கொள்ளும்போது அதிக வரவேற்பை சமூகரீதியில் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளது என்றும், எதிர்காலத்தில் இத்துறையானது தனித் தொழில் துறையாக மாற்றமடைவதுடன் சமூகத்தில் பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக உளரீதியான தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும் எனவும் இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12353 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | சமூக ஊடகம் | en_US |
| dc.subject | ஆச்சரியமமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் | en_US |
| dc.subject | ஊடக ஒழுக்க நெறி | en_US |
| dc.title | சமூக ஊடகங்களில் தரவேற்றப்படும் ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கல்: ஊடக அறநெறி சார்ந்த ஓர் பார்வை | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- சமூக ஊடகங்களில் தரவேற்றப்படும் ஆச்சரியமூட்டும் வெகுமதிப் பரிசில்கள் வழங்கல்.pdf
- Size:
- 178.09 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: