யாழ்ப்பாணத்து மரபு எத்து மரபு வழிப் பெண் கல்வி

Abstract

எழுத்து வடிவிலமைந்த வரன்முறை யான நேரடி ஆவணங்கள் கிடைக்கப் பெறாமையால் நாட்டாரியல், அறிகை மானிடவியல் (Cognitive Anthropology) சமூக மானிடவியல் முதலிய ஆய்வுப் புலங்களின் வழியாக யாழ்ப்பாணத்து மரபு வழிப் பெண்கல்வி பற்றி ஆராய வேண்டியுள்ளது. சமூகம் என்பது பல நிரலமைப்புக்களை உள்ளடக்கிய வடிவமாதலால், உயர்ந்தோர் வழக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மரபுவழிப் பெண் கல்வி பற்றி அறிய முற்படுதல் முழுமையாகாது. தமிழர் பாரம்பரியத்தில் நிகழ்ந்த கூட்டுமொத்தமான கல்விச் செயற்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு யாழ்ப்பாணச் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் நிகழ்ந்த பெண் கல்விச் செயற்பாடுகளைத் தொகுத்து நோக்குதல் இன்றியமையாததாகும். ஒழுங்குபடுத்தப்பட்ட நவீன கல்வி நிறுவன வடிவங்களை ஒத்த காட்டுருக்கள் யாழ்ப்பாணத்து மரபுவழிப் பெண் கல்வியிலே காணப்படாவிடிலும் அறிகை சார்கல்வி, எழுச்சி சார்கல்வி, உடலியக்கம் சார்கல்வி முதலியவற்றைப் பெண்களுக்கு வழங்குவதற்கான வினைத்திறன் பொருந்திய செயலமைப் புத் தொகுதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மைக்குப் பரவலான சான்றுகள் உள்ளன.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By