விவசாய சமூகத்தில் வேளாண் சுற்றுலாவின் அபிவிருத்தி வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள்: நுவரெலியாப் பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு
| dc.contributor.author | Duvaraga, S. | |
| dc.contributor.author | Thulasika, D. | |
| dc.date.accessioned | 2026-02-27T08:11:14Z | |
| dc.date.available | 2026-02-27T08:11:14Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.description.abstract | ஏற்றுமதி இல்லாமல் வெளி நாணயத்தைச் சம்பாதிப்பதற்கான வழிகளையும் பிராந்திய வளர்ச்சியை வேகமாக்குவதையும் வருமானத்தை உருவாக்கும் செயல்பாடுகளின் அளவை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள சுற்றுலாத்துறையின் முக்கிய அங்கமாக வேளாண் சுற்றுலா காணப்படுகின்றது. “FARM TO DINING TABLE”” என்ற மகுடவாசகத்தின் கீழ் வேளாண்; சுற்றுலாவானது இயங்கி வருகின்றது. இந்து சமுத்திர முத்தின் சிகரம் என முத்திரை குத்தப்பட்ட இலங்கையின் மிக உயர்ந்த நகரமான நுவரெலியாப் பிரதேசம் மதிப்புமிக்க வேளாண் சுற்றுலா வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவ்வகையில் ஆய்வுப் பிரதேசமான நுவரெலியா தன்னகத்தே விலைமதிப்பற்ற விவசாய வளங்களை கொண்டிருப்பினும் வேளாண் சுற்றுலா என்ற ரீதியில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதற்கான சவால்களை கண்டறிந்து வாய்ப்புக்களை உருவாக்கி வேளாண் சுற்றுலாவினை அபிவிருத்தியடையச் செய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது முதல் நிலைத் தரவுகளாக நேர்காணல்கள் மற்றும் நேரடி கள அவதானிப்பு முறைகள் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளையும் இரண்டாம்; நிலைத் தரவுகளாக நூல்கள், கட்டுரைகள் சஞ்சிகைகள் என்பன மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளையும் ஆராய்ந்து, கலப்பு முறை அடிப்படையிலான ஆய்வு முறையியலைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதிய வருமானம் இன்மை, சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்வதற்கான பொருத்தமான கட்டடங்கள், உபகரணங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை, வேளாண் சுற்றுலா தொடர்பான விழிப்புணர்வின்மை, வேளாண் சுற்றுலாவில் போதிய பயிற்சி இன்மை, வன விலங்குகளால் அடிக்கடி ஏற்படும் பயிர் சேதங்கள், வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு அரசாங்க நிறுவனங்களின் போதிய ஆதரவு இல்லாமை என்பன நுவரெலியாப் பிரதேசத்தில் வேளாண் சுற்றுலா அபிவிருத்தியடையாமல் இருப்பதற்கான சவால்களாக கண்டறியப்பட்டன. இவ்வாய்வினூடாக வேளாண் சுற்றுலாவினை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளாக கிராமவாசிகளின் முக்கிய தொழிலாக விவசாயம் காணப்படுகின்றமை, ஆண்டுதோறும் சுமார் 8,000 தொடக்கம் 12000 வரை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கிராமத்திற்கு வருகை தருகின்றமை, சுற்றுலா விடுதிகள், சுற்றுலா இயக்க நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் என்போர் விவசாயிகள் உள்ளிட்ட உள்;ர் சமூகத்தினருக்கு வேளாண் சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க பல வழிகளில் ஆதரவளித்துள்ளமை போன்றன அடையாளம் காணப்பட்டு 3A முறையினை அடிப்படையாகக்கொண்டு இதனை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அமைவிடம், உட்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பான, சுத்தமான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார வசதிகள், அரசாங்கத்தின் ஊக்கத்தொகைகள் வழிகாட்டுதல்கள் மற்றும் நிறுவன ஆதரவு என்பவற்றினையும் அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாய்வில் முன்மொழியப்பட்டுள்ளன. | en_US |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12279 | |
| dc.language.iso | en | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | வேளாண் சுற்றுலா | en_US |
| dc.subject | நுவரெலியா | en_US |
| dc.subject | விவசாயி | en_US |
| dc.subject | சுற்றுச்சூழல் | en_US |
| dc.subject | கிராமம் | en_US |
| dc.title | விவசாய சமூகத்தில் வேளாண் சுற்றுலாவின் அபிவிருத்தி வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள்: நுவரெலியாப் பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- விவசாய சமூகத்தில் வேளாண் சுற்றுலாவின் அபிவிருத்தி வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள்.pdf
- Size:
- 197.25 KB
- Format:
- Adobe Portable Document Format
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: