கோப்பாய்க் கல்விக் கோட்ட கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கேத்திர கணித எண்ணக்கருக்களின் விருத்திநிலைக்கும் ஆசிரியர்களது மனப்பாங்குசார் பண்புகளுக்கும் இடையிலான தொடர்பு
| dc.contributor.author | Kowsika Louides, R. | |
| dc.contributor.author | Piratheeban, K. | |
| dc.date.accessioned | 2025-01-27T06:17:30Z | |
| dc.date.available | 2025-01-27T06:17:30Z | |
| dc.date.issued | 2024 | |
| dc.description.abstract | பாடசாலைகளில் கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கேத்திர கணித எண்ணக்கருக்களின் விருத்திநிலைக்கும் ஆசிரியர்களது மனப்பாங்குசார் பண்புகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதை நோக்காகக் கொண்டு அளவறி அணுகுமுறையில் அமைந்த குறுக்குவெட்டு அளவைநிலை ஆய்வாகமேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்விற்கான குடித்தொகையாகக் கோப்பாய்க் கல்விக் கோட்டத்தின் கனிஸ்ட இடைநிலைப் பிரிவில் கல்வி கற்கும் 2614 மாணவர்கள் கொள்ளப்பட்டு, அவர்களில் 179 மாணவர்கள் பால் நிலையை அடிப்படையாகக் கொண்டு படைகொண்ட எழுமாற்று மாதிரி எடுப்பினுடாக ஆய்வு மாதிரியாக தெரிவு செய்யப்பட்டனர். இந்த ஆய்வுக்கான தரவு சேகரிப்புக் கருவியாக ஆய்வாளனினால் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்து பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், விவரணப் புள்ளிவிபரவியல் நுட்பங்களான சராசரிகள், சதவீதம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் அனுமானப் புள்ளிவிபவியல் நுட்பமான Pearson’s correlation testஐப் பயன்படுத்தியும் தரவுப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. கனிஸ்ட இடைநிலை மாணவர்கள் கேத்திர கணித எண்ணக்கருக்களின் விருத்தி நிலையில் சராசரி நிலையைக் கொண்டுள்ளனர் ( M = 2.86, SD = .78)மற்றும் பரிமாணங்களான கோணங்கள் ( M = 2.86, SD = .78), தளவுருக்கள் (M = 3.53, SD = .87),நேர் கோடுகளுடன் தொடர்புபட்ட கோணங்கள் (M = 1.77, SD = .78), பல்கோணிகள் (M = 2.69, SD = 1.37) , திண்ம உருக்கள் (M = 3.2, SD = 1.07) மற்றும் அமைப்பு (M = 1.77, SD = .78) என்பன தொடர்பிலும் சராசரி நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கணித பாட ஆசிரியர்களின் மனப்பாங்குசார் பண்புகள் தொடர்பிலான மாணவர் புலக்காட்சி சிறப்பானதாகக் காணப்படுகின்றது. ( M = 3.59, SD = .38)மற்றும் பரிமாணங்களான ஆசிரியர் வழிகாட்டல் (M = 3.49 , SD = .64), ஆறிவாற்றல் செயற்பாடுகள் (M = 3.69 , SD = .64), ஆசிரியரின் அதரவு (M = 3.68 , SD = .61), வகுப்பறை முகாமைத்துவம் (M = 3.59 , SD = .38), ஆசிரியர்-மாணவர் தொடர்பு(M = 3.55 , SD = .69) தொடர்பிலும் மாணவர் புலக்காட்சி; உயர்ந்தளவில் காணப்படுவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கணித பாட ஆசிரியர்களின் மனப்பாங்கு சார் பண்புகள் தொடர்பிலான மாணவர் புலக்காட்சிக்கும் கேத்திர கணித எண்ணக்கருக்களின்; விருத்தி மட்டத்திற்கும் இடையிலான தொடர்பு புறக்கணிக்கத்தக்க எதிர்த்தொடர்பாகக் காணப்படுகின்றது ( r = -0.089, n = 179, p = .236). கணிதபாட ஆசிரியர்களின் மனப்பாங்குசார் பண்புகள் தொடர்பிலான மாணவர் புலக்காட்சி சிறப்பானதாகக் காணப்படுகின்றபோதிலும் அவர்களிடையே கேத்திர கணித எண்ணக்கருக்கள் உயர்நிலையில் விருத்தியடையாமை இவ்விடயம் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. | en_US |
| dc.identifier.citation | கௌசிகா லொயிட்ஸ், இ., பிரதீபன், கு (2024). கோப்பாய்க் கல்விக் கோட்ட கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கேத்திர கணித எண்ணக்கருக்களின் விருத்திநிலைக்கும் ஆசிரியர்களது மனப்பாங்குசார் பண்புகளுக்கும் இடையிலான தொடர்பு. Proceedings of First International Research Conference in Education IRCE – 2024, 283. | |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11006 | |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.subject | கணித எண்ணக்கருக்கள் | en_US |
| dc.subject | கேத்திரகணிதம் | en_US |
| dc.subject | கேத்திரகணித எண்ணக்கருக்கள் | en_US |
| dc.subject | மனப்பாங்குசார் பண்புகள் | en_US |
| dc.title | கோப்பாய்க் கல்விக் கோட்ட கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கேத்திர கணித எண்ணக்கருக்களின் விருத்திநிலைக்கும் ஆசிரியர்களது மனப்பாங்குசார் பண்புகளுக்கும் இடையிலான தொடர்பு | en_US |
| dc.type | Conference paper | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- கோப்பாய்க் கல்விக் கோட்ட கனிஸ்ட இடைநிலைப் பிரிவு .....pdf
- Size:
- 266.87 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
License bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: