இலங்கைத் தமிழியல்சார் வெளியீடுகளைச் சேகரித்தலும் ஆவணப்படுத்தலுக்குமான செயற்றிட்டம்

Abstract

ஒரு சமூகம் நிலைபேறுடைய சமூகமாக இயங்குவதற்கும் அச்சமூகத்தின் மதிப்புக்களையும் பாரம்பரியங்களையும் கட்டியெழுப்புவதற்கும் முன்னைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளை பரிசோதித்து பார்ப்பதற்கும் இலக்கிய மூலாதாரங்கள் வரலாற்று சான்றாதாரங்களாக அமைகின்றன. இவை ஒர் நாட்டினதும், மொழியினதும், இனத்தினதும் அடையாளமாகும். இதனை கடந்த காலத்திலிருந்து சேகரித்து எதிர்காலத்திற்கு கையளிக்கும் ஊடகமாகவும் ஆவணக்காப்பக மாகவும் நூலகங்கள் திகழவேண்டும். அந்தவகையில் ஈழத்தில் தமிழிலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் நூலக வளர்ச்சியிலும் ஆவணவாக்கல் என்பது பின்தங்கிய நிலையிலும், பின்பற்றப்படாத நிலையிலுமே காணப்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கமானது ஆவணவாக்கல் செயற்றிட்டமொன்றைபரிந்துரைத்தது. இலங்கையில் வெளிவருகின்ற, ஈழத்தமிழர்களால் வெளியிடப்படுகின்ற, ஈழத்தமிழர் தொடர்பாக வெளிவருகின்ற நூல்களையும், சிறுவெளியீடுகளையும் சேகரித்து ஆவணப்படுத்தி பாதுகாப்பதனை கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தின் செயற்றிட்டங்களில் ஒன்றாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கான சிந்தனை 1960களில் தோற்றம் பெற்றாலும் 2001ஆம் ஆண்டிலேயே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அக்காலகட்டத்திலிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக துறைசார் வல்லுநர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழியல் நூற்சேகரிப்புப் பகுதியில் தமிழ்மொழி மூலமாக வெளிவந்த நூல்கள், சிறப்பு மலர்கள், சிறுபிரசுரத்தொகுப்புகள், சஞ்சிகைத் தொகுப்புகள் என்பன சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. சிறுவெளியீடுகள் அனைத்தும் விடய அடிப்படையில் ஒன்று சேர்க்கப்பட்டுத்தொகுத்துக்கட்டப்பட்டுபாதுகாக்கப்பட்டுள்ளன.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By