போர்க்கால சூழமைவில் இறைபணி:திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு பார்வை (1983 -2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி)

dc.contributor.authorRajini, S.
dc.date.accessioned2026-01-05T04:00:12Z
dc.date.available2026-01-05T04:00:12Z
dc.date.issued2024
dc.description.abstractதிருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கத்தோலிக்கரும் இறைவனின் பணியை துறவறம் அல்லது இல்லறம் மூலமாகவும் தனியாகவும் குழுக்களாகவும் ஆற்றிவருகின்றார்கள். இலங்கையில் கத்தோலிக்க சமயமானது போர்த்துக்கேயருடைய வருகையினால் மிகவேகமாக வளர்ச்சி கண்டது. இதன் பின்னணியில் திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் யுத்தகாலத்தில் இன மத மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் பணிபுரிவதில் பல சவால்களை எதிர் கொண்டதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட மக்களுக்கு யுத்த காலத்தில் இறைநம்பிக்கையை கொண்டு சேர்ப்பதில் எவ்வாறான இன்னல்கள் காணப்பட்டன என்பதை கண்டறிவது இந்த ஆய்வினுடைய பிரதான நோக்கமாகும். பல்வேறுபட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் உயிருக்கு பயந்து வெளிநாடுகளிற்கு சென்றதும் இறை நம்பிக்கை குறைவடைந்து சென்றதற்கு காரணங்களாக அமைந்தன. நீதிக்கு குரல் கொடுத்து உறுதியுடனும் நேர்மையுடனும் பொதுநலத்துடனும் தங்கள் உயிரை மக்களுக்காக தியாகம் செய்தார்கள். இந்த வகையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்பணி சந்திரா பெர்னாண்டோ செல்வராஜா சவரிமுத்து மற்றும் இயுஜின் எட்பர்ட் (இயேசு சபை துறவி) என்பவர்களை நினைவு கூரலாம். இவர்களின் வாழ்வு நல்ல சான்றாக உள்ளது. இந்த ஆய்வினுடைய முதல் நிலை தரவுகளாக இந்த மறைமாவட்டதில் மக்கள் மத்தியில் இறைநம்பிக்கையை கொண்டு சேர்ப்பதற்கு உறுதுணை புரிந்த குருக்கள் துறவிகள் மற்றும் இறை விசுவாசிகளுடனான நேர்காணல்கள், கிறிஸ்தவ சமய நிறுவனங்கள் கத்தோலிக்க சமயகுழுக்கள் இளையோர் ஒன்றியம் பக்திசபைகள் போன்ற குழுக்களுடனான கலந்துரையாடல்கள், ஆய்வு வினாக்கொத்துக்கள் போன்றன முதல் நிலை தரவுகளாக அமைகின்றன. இரண்டாம் நிலை தரவுகளாக பொருந்தக்கூடிய வகையில் அமைகின்ற ஆய்வு நூல்கள், ஆய்வு ஏடுகள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் என்பன அடங்குகின்றன. இலங்கையில் யுத்தமானது திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மாத்திரம் அன்றி யாழ்ப்பாணம் மன்னார் மறைமாவட்டங்களிலும் பிரதானமாக ஏற்பட்டது. இந்த ஆய்வானது திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைகின்றது. இனிவருகின்ற ஆய்வுகள் ஏனைய மறைமாவட்டங்களில் யுத்தகால சூழமைவில் இறைபணி எவ்வாறு சவாலாக விழிப்புணர்வாக உந்துதலாக அமைந்தது என்பதை ஆய்வு செய்ய முடியுமென முடியுமென பரிந்துரை செய்யப்படுகின்றது.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11951
dc.language.isootheren_US
dc.publisherUniversity of jaffnaen_US
dc.subjectதிருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டம்en_US
dc.subjectசவால்en_US
dc.subjectஇறைநம்பிக்கைen_US
dc.subjectயுத்தகாலம்en_US
dc.subjectஇறைபணிen_US
dc.titleபோர்க்கால சூழமைவில் இறைபணி:திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு பார்வை (1983 -2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி)en_US
dc.typeConference paperen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
போர்க்கால சூழமைவில் இறைபணி.pdf
Size:
165.4 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections