யாழ்ப்பாண மாவட்ட கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் வாகனக் குத்தகை கடன்கள் கடனாளிகளின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
உலகளாவிய ரீதியில் அபிவிருத்தி அடைந்து
வரும் நாடுகளில் நிதிநிறுவனங்கள் மற்றும் குத்தகைக் கம்பனிகளின்
செயற்பாடுகள் முக்கியம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.
எனவே நிதிநிறுவனங்கள் மற்றும் குத்தகைக் கம்பனிகளிடையே
போட்டித்தன்மை அதிகரித்துள்ளமையினால் வாடிக்கையாளருக்கு
வழங்கும் சேவைகளும் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஒரு பகுதியாகவே வாகனங்களிற்கான குத்தகைக் கடன் வழங்கும்
சேவைகள் அமைந்துள்ளது. குத்தகைக் கம்பனிகளுக்கிடையில்
போட்டித்தன்மை அதிகரித்துள்ளமையினால் வாடிக்கையாளருக்கான
வாகனக் குத்தகைக் கடன்கள் வழங்கும் சேவைகளும் அதிகரித்துள்ளன.
இக்கடன்களைப் பெற்றுக்கொள்ளும் கடனாளிகளின் வாழ்க்கைத்தரத்தில்
இவ் வாகனக் குத்தகைக் கடன்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வாக
இது உள்ளது. யாழ்ப்பாண மாவட்டகரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில்
குத்தகைக் கம்பனிகள் வழங்கும் வாகனக் குத்தகைக் கடன்கள்
கடனாளிகளின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தினைக்
கண்டறிதலை நோக்கமாகக் கொண்ட இவ்வாய்வானது வாகனக்
குத்தகையைப் பெற்றுக்கொண்ட கடனாளிகளில் எழுமாறாக 100
வாகனக் குத்தகைக் கடனாளிகளைத் தெரிவு செய்து அவர்களுக்கு
வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டது. வாகனக் குத்தகைக் கடன்கள்
கடனாளிகளின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக
வருமானம், கல்வி, சேமிப்பு, முதலீடு, சுகாதாரம், உணவு போன்ற
மாறிகள் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளன. வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட
தரவுகளுடன் நேர்காணல், அவதானம் மூலமும் தரவுகள் பெறப்பட்டு
டுமைநசவ ளஉயடந முறையினைப் பயன்படுத்தி ளுPளுளு கணணி
மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது.ஆய்வின் பிரதானமான
முடிவு கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் குத்தகை கம்பனிகள் வழங்கும்
வாகனக் குத்தகைக் கடன்கள் கடனாளிகளின் வாழக்கைத்தரத்தில்
நடுத்தர அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பது ஆகும்.
அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட மாறிகளில் வருமானம், கல்வி,
சுகாதாரம் போன்றன நடுத்தர அளவிலும் சேமிப்பு, முதலீடு போன்றன
குறைந்த அளவிலும் உணவு உயர்ந்த அளவிலும் வாழ்க்கைத்தரத்தில்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆய்வின் முடிவுகளில் வாகனக்
குத்தகைக் கடன்களைப் பெற்ற கடனாளிகளின் வாழ்க்கைத்தரத்தில்
தாக்கம் செலுத்துகின்ற குறைந்த மற்றும் நடுத்தரளவில் தாக்கம்
செலுத்தும் மாறிகளைக் கருத்திற் கொண்டு அவற்றை உயர்ந்தளவில்
அதிகரிப்பதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்படுகின்றன.