சித்தமருத்துவத்தில் சரீர அமைப்பு - ஓர் இலக்கிய ஆய்வு

Abstract

சித்தமருத்துவத்தில் சரீர அமைப்பானது கரு உற்பத்தியில் ஆண், பெண் சுக்கில சுரோணிதங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவாகுகையிலே தீர்மானிக்கப்பட்டுவிடுவதாக நூல்களில் கூறப்படுகின்றது. சரீரவமைப்பானது வாத, பித்த, கப தோஷங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதுடன் இம் மூன்று தோஷங்களும் கலப்புறும் அளவிற்கேற்ப தொந்த, சன்னிபாத சரீரவமைப்புக்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. சரீர அமைப்புப் பற்றி கூறப்பட்ட 12 சித்தமருத்துவ நூல்கள் சித்தமருத்துவ நூலகத்திலிருந்து ஆய்விற்காக எடுக்கப்பட்டு அவற்றில் உள்ள தரவுகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட12 நூல்களில் பிரகிருதி என்ற பெயரானது 33%(4) நூல்களிலும் தேகக்குறி என்ற பெயரானது 25%(3) நூல்களிலும் தேகி இலக்கணம், சரீரக்குணம் என்ற பெயர்களானது இவ்விரண்டு நூல்களிலும் சரீரஅமைப்பு சரீரக்கூறு, தேகக்கூறு என்னும் பெயர்களானது அகஸ்தியர் இரண்டாயிரத்திலும் தேகலட்ஷணம் என்ற பெயரானது தன்வந்திரி வைத்தியம் என்ற நூலிலும் உடலினன் இயல் என்ற பெயரானது சித்தமருத்துவாங்கச் சுருக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்து(10) நூல்களில் 83% வாத, பித்த பிரகிருதிகளும், 67%(8) நூல்களில் கபப்பிரகிருதியும் கூறப்பட்டுள்ளது. வாத பிரகிருதியின் இலட்சணங்களான தேகம் கருமை எனும் இலட்சணமானது 40%(4) நூல்களிலும் தேகத்தில் வாய்வுப்பெருக்கம் ,தேகவுளைச்சல் ,உடல்கடுப்பு, தேகமெலிவு ஆகிய இலட்சணங்கள் 30%(3) நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 50% மேற்பட்ட நூல்களில் தேகமெலிவு, அற்பஉண்டி, வாலிபவயதில் நரை, தேகநிறம் வெண்மையாகவும், அடிக்கடி வியர்த்தல், உடல் காங்கை, பல ஒளியுள்ள உருவைக் காணுதல் போன்ற இலட்சணங்கள் பித்த பிரகிருதியின் இலட்சணங்களாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் பெரியோர்களிடத்தில் மதிப்பு, தைரியம், வீரம், மதியில் சிறப்பு, பலகலைகளையும் கற்கும் ஆற்றல் போன்றபண்புகள் 40% ஆன நூல்களில் கூறப்பட்டுள்ளது. கபப் பிரகிருதியின் இலட்சணங்களாக 63% ற்கு மேலான நூல்களில் தேகம் கொழுமை, சிவந்ததேகம், குமறலான குரல் ஓசை, செழிப்பான தலைமயிர் என்பனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் 50%நூல்களில் பொய்யை மெய் போல் பேசுதல், இனிப்பில் விருப்பம், அதிகமோகம், கம்பீரக் கொள்கை போன்ற பண்புகளும் கூறப்பட்டுள்ளன. அஸ்டவித பரீட்சைக்கும் சரீர இலட்சணத்திற்கும் இடையேயான தொடர்பைப் பார்க்கும் போது வாத சரீரம் உடையவர்களுடைய மலம் கறுப்பாகவும், பித்ததேகியின் மலம் மஞ்சளாகவும், கபதேகியினது வெளுப்பாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பரீட்சை முறைகளை வைத்து நோயாளி என்ன நோயில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் கணிக்க முடிவதோடு சிகிச்சைமுறைகளையும் தீர்மானிக்க முடியும். தேகஅமைப்பு, சரீர அமைப்பு என்பது சித்தமருத்துவத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்நூலாய்வில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. வாத, பித்த, கப பிரக்கிருதிகளின் இலட்சணங்கள் வாத, பித்த, கப கூறுகளின் இயல்புகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By