பரராசசேகரம் கெர்ப்பரோக நிதானத்தில் கூறப்புட்ட மருந்துகளும் அவற்றின் மூலப்பொருட்களில் உள்ள மூலிகை இடுகுறிப்பெயர்களில் ஓர் ஆய்வு
Loading...
Date
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Unit of Siddha Medicine, University of Jaffna
Abstract
சித்த மருத்துவத்திற்கே தனித்துவமான செய்யுள்வடிவில் உள்ள மருத்துகள் பயன்படுத்தப்படாமல் வருகின்றது. இக் குறையை நிவர்த்தி செய்வதற்காக சித்த மருத்துவத்திற்கு தனித்துவமான நூல்களில் செய்யுள்வடிவில் காணப்படும் மருந்துகளின் மூலப்பொருட்களும் செய்முறைகளும் நடை முறை மொழிக்கு மாற்றப்பட்டு சித்த மருந்துகள் உற்பத்தி செய்வதற்கு வழி செய்யப்பட வேண்டும். பரராசசேகரம் யாழ்ப்பாணத்து மன்னர்கள் காலத்தில் தோன்றிய வைத்திய நூலாகும். ஏடுகளாக இருந்த இவ் நூலை முதல் முறையாக அச்சுப்பிரதிகளாக சுதேச வைத்தியரான ஐ.பொன்னையா வெளியிட்டார். இந்த ஆய்வானது பரராசசேகரம், கெர்ப்பரோக நிதானத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பரராசசேகரம் கெர்ப்பரோக நிதானம் (பாகம் இரண்டு கூறுகின்ற செய்யுள்களில் மருந்துகளுக்கான செய்யுள்கள் இனங்காணப்பட்டு அவற்றில் பயன்படும் மூலப் பொருட்களினுள் இடுகுறிப்பெயர்களில் உள்ள மூலிகை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான செய்யுள்களின் பிரகாரம் பரராசசேகரம் கெர்ப்பரோக நிதானத்தில் உள்ள மருந்துகளின் மொத்த எண்ணிக்கை 149 ஆகும். எண்ணெய் 22.8%(34), நெய் 17.4%(26), குடிநீர் 12.1%(18) உம் காயம் 9.4%(14) உள்ளது. இனங்காணப்பட்ட இடுகுறிப் பெயர்களின் மொத்த எண்ணிக்கை 257 ஆகும். இவற்றுள் தாவரவகுப்புக்கள் 92%(237), தாதுவகுப்புகள் 06%(16), ஜீவப்வகுப்புகள் 02%(04 உள்ளது. தாவரவகுப்புக்கான இடுகுறிப்பெயர்களுள் கூட்டு சரக்குகளுக்கான இடுகுறிப்பெயர்கள் 16%(39), தனிசரக்குகளுக்கான இடுகுறிப்பெயர்கள் 84%(198) உள்ளது. மொத்த கூட்டுசரக்குகளில் இருசீரகம் 6.2%(16) உம் திரிகடுகு 3.89%(10) உம் உபயோகிக்கப்பட்டுள்ளது. தனிசரக்குகளுக்கான இடுகுறிப்பெயர்களின் மொத்த எண்ணிக்கை 198 இல் 93 வெவ்வேறு வகையான மூலிகைகளின் பெயர்கள் இனம்கண்டுபதிவு செய்யப்பட்டுள்ளது. தனிசரக்குகளுக்கான மொத்த இடுகுறிப்பெயர்களுள் இடுகுறிப்பெயர் அடிப்படையில் உலுவா, கைப்பு தனிதனியாக 4.5%(09) காணப்படுவதோடு தமிழ்பெயர் அடிப்படையில் வெந்தயம், ஆடுதீண்டாப்பாலை, வெண்கொடிவேலி என்பன தனிதனியாக 4.5%(09) கணப்படுகின்றது. பரராசசேகரம் கெர்ப்பரோக நிதானத்தில் கூறப்பட்ட மருந்துகளில் பெரும்பகுதி செய்யுள்வடிவமாக இருப்பதுடன் மருந்துகளின் மூலப் பொருட்களில் அதிக மூலிகைகள் இடுகுறிப்பெயர்களில் உள்ளன. பல இடுகுறிப் பெயர்கள் காணப்படுவதால் இவ் நூலுக்கு தனியொரு மூலிகை அகராதி தயாரிக்கப்பட வேண்டும்.